தவறியும் இந்த பொருட்களை மிதித்து விடாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் ஒவ்வொரு பொருட்களும் தெய்வீக அம்சத்தை கொண்டதாக பார்க்க படுகிறது. அதனால், எந்த ஒரு பொருட்களையும் உதாசீனம் செய்யக்கூடாது என்பார்கள். அதாவது, அந்த பொருட்களை காலால் மிதிப்பது, அந்த பொருட்களை கைகளால் தூக்கி எரிவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
அவ்வாறு செய்யும் பொழுது நம் வீடுகளில் சில பிரச்சனைகள் உண்டாகும். காரணம், நாம் ஒரு பொருளை மதிப்புடன் வைப்பதனால் மஹாலக்ஷ்மி தயார் மனம் மகிழ்ச்சி அடைகிறாள். அதுவே நாம் அவமரியாதை செய்யும் பொழுது அவள் சினம் கொள்வதாக சொல்லப்படுகிறது.
நம்முடைய இந்து மதத்தில் விலங்குகளும் தெய்வத்தின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் நாம் எந்த விலங்குகளையும் அவமரியாதை செய்வதோ, மிதிக்கவோ கூடாது, அவ்வாறு மிதித்தால் அவருக்கு பாவம் வந்து சேருகிறது.
மேலும், நம் வீடுகளில் உணவு பொருட்களை அவமதிப்பதோ அதை தெரியாமல் மிதிப்பதும் கூடாது. நம் வீடுகளில் உணவு பொருட்கள் கை தவறி கீழே சிதறி இருந்தால், அதை உடனே சுத்தம் செய்து விட வேண்டும். அதை மிதிப்பது மிக பெரிய பாவ செயல் ஆகும்.
அதோடு மிக முக்கியமாக நாம் பயன் படுத்தும் வண்டி வாகனத்தையும் நாம் மிக கவனமாக பயன் படுத்த வேண்டும். காரணம், வாகனம் தான் நம் உயிர் காக்கும் கவசம் ஆகும். அதற்கு உரிய பூஜைகள் செய்து நாம் மரியாதையாக நடத்த வேண்டும்.
நம்முடைய வீடுகளை சுத்தம் செய்ய பயன் படுத்தும் துடைப்பத்தை நாம் அவமரியாதை செய்யக்கூடாது. அவை நம் வீட்டை சுத்தம் செய்வதோடு, அழுக்குகளை அகற்றி வறுமையை நீங்க செய்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |