திருஷ்டிக்காக கட்டிய பூசணிக்காயை எத்தனை நாளில் உடைக்க வேண்டும்?
சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பர். அப்படியாக நம்மை நம் குடும்பத்தை திருஷ்டியில் இருந்து காப்பற்றுவது என்பது எளிதாக இருந்தாலும் அதற்காக மெனக்கெடல் என்பது அதிகம்.
அப்படி இருக்க நாம் குடும்பத்துடன் ஏதேனும் திருமணம் அல்லது பிற நிகழ்ச்சிக்கு சென்று வர வீட்டிற்கு வந்தவுடன் நாம் சூடம், காய்ந்த மிளகாய், கடுகு, கல் உப்பு போட்டு அனைவரையும் திருஷ்டி சுற்றி கழிப்பது உண்டு.
ஆனால் நம் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி அல்லது வேற சுப காரியம் என்கின்ற பொழுது உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அதிக நபர் நம் வீட்டிற்கு வருவார்கள். அப்படியாக திருஷ்டிகள் அதிகம் ஆக வாய்ப்பு இருக்கிறது.
அதனால் நம் வீட்டில் நிகழ்ச்சியின் முடிவில் பூசணிக்காய் உடைப்பதற்கு பூசணிக்காய் கட்டி விடுவது உண்டு. அப்படியாக அந்த பூசணிக்காயை எப்பொழுது உடைக்க வேண்டும் என்று பலரும் குழப்பம் கொள்வர்.
அதவாது திருஷ்டிக்காக கட்டிய பூசணிக்காயை அது அழுகும் முன் உடைக்கும் வேண்டும். கொஞ்சம் காய் பூசணிக்காயாக இருந்தால் சுப காரியம் முடிந்து மூன்றாவது நாளில் உடைக்கலாம்.
மேலும் நம் அனைவரது வீட்டிலும் திருஷ்டிக்காக கண்டிப்பாக திருஷ்டி பொம்மை கட்டி வாசலில் இடுவது நன்மை உண்டாக்கும் . ஏன்னென்றால் அது நம்மை பல தீய சக்திகளிடம் இருந்தும் கண் திருஷ்டிகளில் இருந்தும் காப்பாற்றும்.
சிலர் வீட்டில் வாசல் முன் எலுமிச்சையை இரண்டாக உடைத்து அதில் குங்குமம் தடவி வைப்பார்கள்.அதுவும் எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து நம்மை நம் வீட்டை காப்பாற்ற உதவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |