கர்ப்பிணிகளுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்..

By Sakthi Raj Sep 11, 2026 12:02 PM GMT
Report

நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் கவலை கொள்பவர்களுக்கும், கர்ப்பிணிகள் தங்களுடைய குழந்தை நலமாக பிறப்பதற்கு வழிபாடு செய்யக்கூடிய முக்கியமான தெய்வமாக கர்பரச்சாம்பிகை அம்மன் இருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் அமைந்திருக்க கூடிய திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவன நாதர் திருக்கோவில் பாடல் பெற்ற காவிரித் தென் தலங்களில் 18 வது சிவத்தலமாக இருக்கிறது.

பண்டைய காலங்களில் இந்த ஆலயம் முல்லை செடிகளால் அடர்ந்த வனமாக காட்சி கொடுத்ததால் முல்லைவனம் என்றும் இங்கு வீற்றிருக்கக்கூடிய இறைவனை முல்லைவன நாதர் என்றும் அழைக்கப்பட்டார்.

கர்ப்பிணிகளுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்.. | Thirukarukavur Garbarakshambigai For Pregnancy

12 ராசிகளின் அடிப்படையில் அவர்கள் இந்த பூமியில் பிறந்த காரணம் என்ன தெரியுமா?

12 ராசிகளின் அடிப்படையில் அவர்கள் இந்த பூமியில் பிறந்த காரணம் என்ன தெரியுமா?

இங்கு வாழ்ந்த நித்துருவன் முனிவருடைய மனைவி வேதிகை கர்ப்பமாக இருந்த பொழுது ஒரு சாபத்தினால் அந்த கர்ப்பம் சிதையும் நிலை உண்டாயிற்று.

ஆதலால், வேதிகை இந்த தல ஆலயத்திற்கு வந்து அம்பிகையை மனம் உருகி வேண்ட அம்பிகை தோன்றி அந்த கர்ப்பத்தை ஒரு கும்பத்தில் வைத்து பாதுகாத்து அது முதிர்ந்ததும் சுகப்பிரசவமாக குழந்தை பிறக்க அருள் பாலித்திருக்கிறார்.

கருவை காப்பாற்றியதால் இந்த தலத்திற்கு திருக்கருகாவூர் என்றும் அம்பிகைக்கு கர்ப்பரட்சாம்பிகை என்ற பெயரும் வந்தது. நீண்ட நாட்கள் குழந்தை இல்லை என்று வருந்தக்கூடிய தம்பதியினர் நம்பிக்கையோடு இந்த ஆலயத்திற்கு வந்து அம்பிகையின் பாதத்தில் வைத்து தரக்கூடிய அந்த நெய் பிரசாதத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருகின்ற பொழுது விரைவில் அவர்களுக்கு அம்பிகையின் அருளால் கரு உருவாகும் என்று ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்.. | Thirukarukavur Garbarakshambigai For Pregnancy

விதியை வெல்ல பாட வேண்டிய சக்தி வாய்ந்த பாடல்.. நிச்சயம் மாற்றம் உண்டு..

விதியை வெல்ல பாட வேண்டிய சக்தி வாய்ந்த பாடல்.. நிச்சயம் மாற்றம் உண்டு..

அது மட்டும் அல்லாமல் கர்ப்பமுற்ற பெண்கள் அம்பிகையின் விளக்கெண்ணெய் பிரசாதத்தை வாங்கி அவர்களுடைய அடிவயிற்றில் தடவி வருகின்ற பொழுது கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய உபாதைகள் விலகி சுகப்பிரசவம் உண்டாக அம்பிகை அருள் புரிகிறாள்.

மேலும், நீண்ட நாள் தோஷத்தினால் தள்ளிப் போகக் கூடிய திருமணம் விரைவில் கைக்கூடி வரவும் இந்த அம்மனை பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இங்கு வீட்டில் இருக்கக்கூடிய மூலவரான முல்லைவன நாதருக்கு உணவு புணுகு சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது தோல் சம்மந்தப்பட்டமான நோய்கள் மற்றும் தீராத வியாதிகளும் குணமடைவதாக நம்பப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US