எதிரிகளையும் தீய சக்திகளையும் அடியோடு விரட்டும் கருட காயத்ரி மந்திரம்

By Sakthi Raj Sep 11, 2026 06:02 AM GMT
Report

வைணவ வழிபாடுகளில் கருடாழ்வார் என்பவர் மகாவிஷ்ணுவின் வாகனமாகவும் அவருடைய பக்தராகவும் இவரை "பெரிய திருவடி" என்ற சிறப்புகளோடு வழிபாடு செய்யக்கூடியவர்.

அந்த வகையில், நாம் நம்முடைய வேண்டுதலை கருடாழ்வார் இடம் சமர்ப்பிக்க அவர் நமக்காக பகவான் விஷ்ணுவிடம் நம் வேண்டுதலை எடுத்து சொல்லி நம்முடைய வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி கொடுக்கக் கூடியவர் என்பது ஐதீகம்.

மேலும், நம் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தடைகள் வருகிறது. சுற்றிலும் எதிரிகள் இருக்கிறார்கள். உங்கள் மீது வளர்ச்சி பொறுக்காமல் போட்டி பொறாமையின் காரணத்தால் நிறைய பழிவாங்கல் உங்களை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. செய்வதறியாது தனித்து நிற்கின்ற வேலையில் நீங்கள் கவலையே கொள்ள வேண்டாம் "கருடாழ்வாரை" சரணடையுங்கள்.

எதிரிகளையும் தீய சக்திகளையும் அடியோடு விரட்டும் கருட காயத்ரி மந்திரம் | Powerful Karuda Gayatri Mantra For Life Struggle

அவர் உங்களுக்கு எப்பேர்பட்ட எதிரிகள் தொல்லையையும் ஜாதகத்தில் "ராகு, கேது" தோஷங்களையும் போக்கி ஒரு நல்ல வாழ்க்கை அருள்பவர். கருடாழ்வாரை நாம் வழிபாடு செய்வது மட்டும் அல்லாமல் அவர் கூறிய கருட காயத்ரி மந்திரத்தை நாம் பாராயணம் செய்வது என்பது நிச்சயம் பெரிய வகையில் நமக்கு கைகொடுக்கும்.

கருட காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட ப்ரசோதயாத்

எதிரிகளையும் தீய சக்திகளையும் அடியோடு விரட்டும் கருட காயத்ரி மந்திரம் | Powerful Karuda Gayatri Mantra For Life Struggle

இந்த கருட காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு 11, 27, 108 ஆகிய எண்ணிக்கையில் மனதார அமர்ந்து தன் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சினைகளும் விலக வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்கின்ற பொழுது நமக்கு கருடாழ்வாரின் முழு அருளால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும், கடன் நெருக்கடிகள் குறையும், இறைவனுடைய அருள் நமக்கு கிடைக்கும், எதிரிகளை போராடி வெல்லக்கூடிய வலிமை உண்டாகும், வேலையில் இருந்த தொந்தரவுகள் விலகும், கல்வி தடை விலகும், திருமண தடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், பெயர் புகழ் ஆகியவற்றை நாம் பெறலாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US