நாளைய ராசிபலன்(11-09-2026)
மேஷம்:
இன்று துணிவோடு சில விஷயங்களை செய்தால் மட்டுமே உங்களுக்கு சாதகமான பலன் வந்து சேரும். நெருக்கடியான சூழ்நிலையையும் தைரியமாக சமாளிப்பீர்கள்.
ரிஷபம்:
இன்று வியாபாரத்தில் இருந்து வந்த தாமதம் விலகும். ஆரோக்கிய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட கசப்புகள் விலகும். பொறாமைகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்:
அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். தாய் வழி உறவுகளால் அலைச்சல் உண்டாகலாம். பிறர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்:
பழைய பிரச்சனைகளுக்கு நல்ல முடிவை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வேலையில் இருந்து சிக்கல்கள் விலகும். நினைத்த இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்:
கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி:
சிறு சிறு வேலையிலும் அலைச்சல் வரலாம். குழந்தைகள் வழியே அனுசரித்து செல்வது அவசியம். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்:
குடும்பத்தினர் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். செல்வம் சேர்ப்பதை பற்றிய கவலைகள் உண்டாகலாம். புதிய தொழில் முயற்சி கைகூடி வரக்கூடிய நாள்.
விருச்சிகம்:
இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு:
மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் உங்களுக்கு கைக்கூடி வரும்.
மகரம்:
திட்டமிட்ட வேலைகளில் சில தாமதங்கள் சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியே அனுசரித்து செல்வது அவசியம். வெளியூர் பயணங்களில் விவேகம் உண்டு.
கும்பம்:
குழந்தைகள் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மீனம்:
வியாபார நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவது அவசியம். மனதில் இருந்து குழப்பங்கள் யாவும் விலகும். அரசு வழியே எதிர்பார்த்து உதவிகள் வந்து சேரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |