உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: திருப்பரங்குன்றம் மலை தீபத்திற்காகப் பலத்த பாதுகாப்பு

Report

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கூடிய அந்த நிகழ்வு தான் இப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இன்று நவம்பர் 28ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று தீபம் ஏற்றியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக மத்திய ரிசர்வ் காவல் படையின் பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்ற தேவையான பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.ஆஃ வீரர்கள் திருப்பரங்குன்றம் வந்திருக்கிறார்கள். தற்போது திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் தீபம் ஏற்றக்கூடிய மலை அனைத்தையும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.  

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: திருப்பரங்குன்றம் மலை தீபத்திற்காகப் பலத்த பாதுகாப்பு | Thiruparankundram Deepam Supreme Court Order

பிறர் விமர்சனங்களைக் கடந்து மன அமைதியுடன் வாழ பகவத் கீதை சொல்லும் ரகசியம்

பிறர் விமர்சனங்களைக் கடந்து மன அமைதியுடன் வாழ பகவத் கீதை சொல்லும் ரகசியம்

சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை:

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்க கூடிய சிக்கந்தர் தர்காவில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ள கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்திருக்கிறார்கள்.

ஆண், பெண், இளைஞர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக அங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து காலை 6.15 மணி அளவில் காவல் துறையினர் அவர்கள் எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவருடைய விவரங்களையும் சேகரித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களை தீவிர பரிசோதனை செய்த பிறகு மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மறுபுறம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் ஒரு பகுதியாக கட்டைகள், மரப்பலகைகள் கொண்டு செல்லப்பட்டன.

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: திருப்பரங்குன்றம் மலை தீபத்திற்காகப் பலத்த பாதுகாப்பு | Thiruparankundram Deepam Supreme Court Order

2026: வைகுண்ட ஏகாதசி எப்போது? பெருமாளின் அருளைப் பெற இந்த வழிபாட்டைத் தவறவிடாதீர்கள்

2026: வைகுண்ட ஏகாதசி எப்போது? பெருமாளின் அருளைப் பெற இந்த வழிபாட்டைத் தவறவிடாதீர்கள்

மதுரையை வந்தடைந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு:

இன்று தீபம் ஏற்றக்கூடிய நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கக்கூடிய கல் தூணல் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் அவர்கள் அடங்கிய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் வழியாக மதுரை விமான நிலையம் வந்தடைந்திருக்கிறார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர ஆணை ராஜேந்திரன் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் திருப்பரங்குன்றம் கோவில் அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலர்கள் தீயணைப்பு துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று உள்ளனர்.

இவர்கள் மலை மீது உள்ள கல் தூண் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தீவிரமாக விரிவாக ஆய்வு செய்தார்கள்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US