திருஷ்டி கழிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

By Yashini May 05, 2024 12:07 AM GMT
Report

 திருஷ்டி என்பது மிகவும் பொல்லாதது என்று கூறுவார்கள். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள்.  

ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும் பொறாமை எண்ணத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

எவர் ஒருவர், தம்மை பார்த்து தீய எண்ணத்துடனும் பொறுமையுடனும் கண் இமைக்காமல் பார்க்கிறாரோ அப்போது நமக்கு திருஷ்டி என்பது ஏற்படும்.

திருஷ்டி கழிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் | Thirusti Kalikkum Manthiram

இதனை போக்குவதற்கு தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிக்கும் முறை என்று செய்து வந்தார்கள். 

கல் உப்பு, வர மிளகாய், கடுகு, எலுமிச்சை பழம் என பல பொருட்களை கொண்டு மந்திரம் திருஷ்டி கழிப்பார்கள்.

அப்படி திருஷ்டி கழிக்கும் போது ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அந்த மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்கும் போது எந்த விதமான திருஷ்டியாக இருந்தாலும் நம்மை விட்டு நீங்கி விடும். 

திருஷ்டி கழிப்பதற்கான மந்திரம்

குடும்பத்தில் திருஷ்டி அதிகமாக உள்ளவர்களை கிழக்கு பார்க்க உட்கார வைத்து உப்பு, வர மிளகாய் மற்றும் கடுகு கொண்டு தலையை இடது மற்றும் வலது புறமாக மூன்று முறை சுற்ற வேண்டும்.

அப்படி சுற்றும்போது இந்த மந்திரத்தை மூன்று கூற வேண்டும். அதன் பிறகு, திருஷ்டி கழித்த பொருட்களை தீயில் போட்டு விட வேண்டும்.  

பாம்பு கண்ணு, பல்லி கண்ணு பல்லியோட போ

பேய் கண்ணு பிசாசு கண்ணு பேயோட போ

பிச்சை கண்ணு திரிச்ச கண்ணு தீயோட போ  

மேலும், எலுமிச்சைப்பழம் கொண்டு திருஷ்டி கழிக்கும்போது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்க வேண்டும்.

மஞ்சள் வர்ண புளித்த மாரி!

ரத்த வீர ராசா கன்னி,

மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா! 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US