மாந்தி தோஷம் புத்ரதோஷம் ஆயுள்தோஷம் நீக்கும் திருவாலங்காடு
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் என்னும் திருவாலங்காடு திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. இதே பெயரில் இன்னொரு கோவில் திருவள்ளூர் மாவட்டத்திலும் உண்டு. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் கோவிலில் புத்திர காமேஸ்வரர் என்ற தனி சிவன் சன்னதியும் இருப்பதால் இக்கோவில் புத்திரப் பேறுக்குரிய கோவிலாக புத்திர தோஷம் தீர்க்கும் கோவிலாக விளங்குகிறது.
இங்கு பரவதியுடன் கூடிய மாந்தீஸ்வரர் சிலைகள் இருப்பதால் ஜாதகத்தில் மாந்தி தோஷம் உள்ளவர்கள் உள்ளவர்களுக்கு இது சிறந்த பரிகார ஸ்தலமாகத் திகழ்கின்றது.
கருவறை நாதர்:
திருவாலங்காடு கோவிலின் கருவறை நாதர் வடாரண்யேஸ்வரர் ஆவார். அம்மனின் பெயர் வண்டார் குழலி. கருவறைநாதர் மேற்கு நோக்கி காட்சி அருள்கின்றார். இத்திருத்தலம் பித்ரு தோஷம் மற்றும் முன் ஜென்ம தோஷத்தை போக்கும் தலமாகும்.
மூலவர் சன்னதியைச் சுற்றிப் பரத நாட்டியத்தின் 108 கரணங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. ஆடல் மகளிர் அபிநயித்துக் காட்டும் அழகான பரதநாட்டிய முத்திரைகள் இத்தோண்களில் கண்டு ரசிக்கலாம்.
எமதர்மரும் சித்ரகுப்தரும்:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மாந்தீஸ்வரர், புத்திர காமேஸ்வரர் சன்னிதிகள் இருப்பது போல எமதர்மனுக்கும் சித்திரகுப்தருக்கும் தனி சிலைகள் உள்ளன. ஆயுள் தோஷம் இருப்பவர்கள் இவரை வணங்கிச் சென்றால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மாந்தி தரும் கெடு பலன்கள்:
மாந்தி இருந்த மனை பாழ் என்று மாந்தியில் இருந்த மனை பாழ் என்பது ஜோதிடப் பழமொழி. ஜாதகத்தில் மாந்தி எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் நசித்துப் போகும். எனவே மாந்தியை தமிழகத்தில் ஜாதகம் எழுதும் போது குறிப்பிடுவது கிடையாது.
ஆனால் கேரளாவில் மாந்தியை வைத்துப் பலன் கூறுவது வழக்கம். ஏழு எட்டாம் இடங்களில் மாந்தி இருக்கும்போது களத்திர தோஷம் ஆயுள் தோஷம் போன்றவை ஏற்படும். அந்த ஜாதகர்கள் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்து பரிகார செய்து தோஷ நிவர்த்தி பெறலாம்.
மாந்தீஸ்வரர்:
மாந்தீஸ்வரர் என்பவர் சிலை வடிவாக அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்றார். இரண்டு கரங்கள் அபய வரத ஹஸ்தமாக இருக்கின்றன. அவருடைய பீடத்துக்கு கீழே ஒருவன் வணங்கி நிற்கின்றான் அவன் தான். மாந்தி.
மாந்திச்வரனுக்கு அருகில் இவ்விருவரும் சுற்று பிரகாரத்தில் காணப்படுகின்றனர். மாந்தி தன் சாபம் தீர்க்க சிவபெருமானை வணங்கி முக்தி பெற்ற ஸ்தலம் இதுவாகும் எனவே இது முக்தி ஸ்தலமாகவும் விளங்குகின்றது.
பரிகார வழிபாடு:
மாந்திக்குத் தோஷ பரிகாரமாக தரையில் பருத்திக்கொட்டையைப் பரப்பி அதன் மேல் ஐந்து அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும் என்று நம்புகின்றனர்.
எமதர்மர் – சித்ரகுப்தர்:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலின் சுற்றுப்புறகாரத்தில் மாந்தீஸ்வரருக்கு அருகில் எமதர்மனும் எமதர்மனின் மனைவியும் சித்திரகுப்தரும் சிலை வடிவில் காணப்படுகின்றனர் .இவர்களை வணங்கி வந்தால் ஆயுள் தோஷம் நிவர்த்தி ஆகும் தீர்க்காயுள் சித்தியாகும்
கொடிமர விநாயகர்:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலின் தனிச்சிறப்பாக விளங்குவது கொடி மரத்துக்கு கீழே தனியாக சிறு அறையில் உள்ள விநாயகர் ஆகும்.இவர் இங்கு கொடிமரக் காவல் தெய்வமாக விளங்குகிறார். அதனை அடுத்து ஒரு நந்தி மண்டபம் உள்ளது அங்கு ஒரு சிறு நந்தி காணப்படுகின்றது இவை எல்லாம் வெளியே மேற்கூரை இன்றி உள்ளன.
இரட்டை விநாயகர்:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலின் கருவறைக்கு வெளியே ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் சுப்பிரமணியரும் இருப்பது மரபு. அவ்வாறு தனி சன்னதியில் இடம் பெறும் விநாயகர் தனி விநாயகராக இருப்பதே வழக்கம்.
ஆனால் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் மட்டும் கருவறை வாசலில் உள்ள விநாயகர் இரட்டை விநாயகராக அருள் பாலிக்கின்றார். இரட்டை விநாயகர் அதிர்ஷ்டத்தின் சின்னம். இரட்டை விநாயகரை வழிபடுவது சகல ஐஸ்வர்யங்களையும் தரும். வெற்றிகளையும் விருதுகளையும் வழங்கும்.
சத்ரு சம்ஹார முருகன்:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் காட்சி அளிக்கின்றனர். இவர் சத்ரு சம்ஹார மூர்த்தியாக விளங்குகின்றார் இவருடைய மயில் இடது புறம் நோக்கி நிற்கின்றது.
திருவாச்சியுடன் கூடிய ஆறுமுகனாக 12 கரங்களுடன் திருவாசியுடன் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட முருகனாக விளங்குகின்றார். அருகில் வள்ளியும் தெய்வானையும் தனித்தனி சிலா சிலை வடிவில் உள்ளனர்.
திருச்சுற்று தெய்வங்கள் :
திருச் சுற்றில் கஜலட்சுமியும் அருகில் நடராசரும் காணப்படுகின்றனர். இவர்களுக்கு அடுத்துப் பழைய வண்டார் குழலி அம்மன் சன்னதி உள்ளது. புதிய சிலை செய்த பின்பு பழைய சிலையை அகற்ற முனைந்ததில் அசரீரி கூற்று கேட்டு அதனை அப்படியே மாற்றாமல் வைத்து விட்டனர்.
எனவே பழைய வண்டார் குழலி தனிச் சன்னதியில் காட்சி தருகின்றாள். திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் பைரவர் சிலை உள்ளது அதன் அருகில் சூரியனும் சனீஸ்வரனும் உள்ளனர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலின் திருச்சுற்றில் சரஸ்வதிக்குத் தனி சன்னதி உள்ளது.
துர்க்கை அம்மன் இரண்டு கரங்களுடன் கோஷ்ட தேவதையாக காட்சியளிக்கின்றார். அதற்கு அடுத்த கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்கின்றார். மேற்கு கோஷ்டத்தில் பிரம்மதேவன் காட்சியளிக்கின்றார்.
திருச்சுற்றுத் தட்சினாமூர்த்தி:
பிரம்ம தேவனுக்கு எதிரில் திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இவர் நான்கு கரங்களுடன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ளார். அருகில் சனாதன முனிவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருச்சுற்றில் இருக்கும் தட்சிணாமூர்த்தி ஆவார் மற்றொரு தட்சிணாமூர்த்தி தனிச்சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.
நான்கு வேத லிங்கங்கள் :
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் மற்ற சிவன் கோவில்களில் இருப்பது போல பிரித்வி லிங்கம், வாயு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், அக்கினி லிங்கம் ஆகிய ஐம் பூதலிங்கங்கள் உள்ளன. இவை தவிர சிறப்பு அம்சமாக நான்கு வேதங்கள் வழிபட்ட நான்கு லிங்கங்கள் காணப்படுகின்றன. இவை இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
பாண லிங்கம்:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பாண் லிங்கம் ஒன்று உள்ளது. பௌத்த கோவில்களில் தேவ மகளிர்க்கு இந்திரிய தானம் செய்யும் இந்திரனைக் குறிக்கக் கந்து வைத்திருந்தனர். இதனையும் பிற்காலத்தில் பாணலிங்கம் என்று அழைத்தனர்.
லிங்கோத்பவரின் சிறப்பு:
திருச்சசுற்றின் கோஷ்டத்தில் காணப்படும் லிங்கோத்பவருக்கு மேல் அண்ணாமலையார் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவமாக காட்சி தருபவர் என்பதும் இறைவன் ஒளி ரூபமாக விளங்குகின்றான் என்பதையும் இப்பெயர் குறிக்கின்றது.
இந்த லிங்கோத்பவருக்கு அருகில் சிறிய வடிவில் பெருமாளும் பிரம்மதேவன் கைகூப்பி வணங்கிய நிலையில் தனித்தனி சிலைகளாகக் காட்சி தருகின்றனர். லிங்கோத்பவரின் சிலையில் அடிப்பகுதியில் வராகவும் மேல் பகுதியில் பறக்கும் அன்னப்பறவையும் உள்ளது.
வழிபாட்டின் பலன் :
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் எல்லா சிறப்பு வழிபாடுகளும் மற்ற சிவன் கோவிலைப் போலவே நடைபெறுகின்றன. இக்கோயிலில் புத்திரகாமேஸ்வரர் தனி சன்னதியில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து வழிபட்டு வர புத்திர தோஷம் நீங்கும் தலம் ஆகும். புத்திர சோகம் உண்டாகாது. தோஷம் என்பது குழந்தையே பிறக்காமல் இருப்பதாகும். புத்திர சோகம் என்பது புத்திரர் மரணம், தீராத நோய், மன நோய், உடல் ஊனம், திருமணத்தில் ஏமாற்றம், வாரிசு இன்மை என புத்திரரால் சோகம் உடவதாகும். இவற்றை தீர்க்கவும் எம்பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |