இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கையே இருக்காதாம்- யார் தெரியுமா?
மனிதர்கள் பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை விரும்பக்கூடிய நபராக தான் இருப்பார்கள். மேலும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நமக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்காதா என்று ஆவலுடன் காத்து இருப்பதும் உண்டு.
ஆனால் ஒரு சில ராசிகள் இயல்பாகவே அதிர்ஷ்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் தன் சொந்த உழைப்புகளால் மட்டுமே முன்னேற முடியும் என்று நம்பக்கூடிய நபராக இருப்பார்கள். அப்படியாக எந்த 3 ராசிகள் அதிர்ஷ்டத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியும் வரை பொறுத்த வரை இவர்கள் எல்லோரிடத்திலும் நட்பாக பழகக் கூடியவர்கள். இவர்கள் மிகவும் யதார்த்தமான நபராக இருந்தாலும் எல்லா இடங்களில் உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும் என்று ஆழமாக நம்பக்கூடிய ஒரு நபராக இருப்பார்கள். ஆதலால் இவர்கள் அதிர்ஷ்டத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அந்த அதிர்ஷ்டத்தை இவர்கள்தான் உருவாக்க வேண்டும் என்று உழைக்கக்கூடிய மனிதர்களாக இருப்பார்கள்.
கன்னி:
கன்னி ராசியை பொறுத்தவரை இவர்கள் பெரும்பாலும் எதையும் புத்திசாலித்தனத்தோடு அணுக வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பார்கள். ஆக இவர்கள் எப்பொழுதும் உழைப்பை போடுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். யாரேனும் அதிர்ஷ்டம் வந்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும் என்று சொன்னால் அதை அவர்கள் முற்றிலுமாக தவிர்க்கக்கூடிய நபராக இருப்பார்கள். மேலும் நிலையான செல்வம் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும் என்று இவர்கள் அடிக்கடி சொல்வதும் உண்டு.
மகரம்:
மகர ராசியினர் பொறுத்தவரை இவர்களை அவ்வளவு எளிதாக எதற்கும் சம்மதிக்க வைக்க முடியாது. இவர்கள் வியாபாரம் தொழில் என்று எந்த விஷயத்திலும் தங்களுடைய முழு ஈடுபாடை செலுத்தி முன்னேற்றம் அடைய விருப்பம் உள்ளவர்கள். இவர்களுடைய கடின உழைப்பு இவர்களை மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு எடுத்துச் சொல்லும். இவர்கள் எப்பொழுதுமே அதிர்ஷ்டம் என்ற ஒரு கதவு திறக்கும் என்று நம்பி காத்திருக்காத ஒரு நபராக இருப்பார்கள. எதார்த்தத்தோடு இயல்பாக வாழ வேண்டும் என்று அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |