எவ்வளவு எதிர்த்தாலும் இவர்களை தோற்கடிக்கவே முடியாதாம்- எந்த ராசிகள் தெரியுமா ?
ஒரு மனிதனுக்கு மன தைரியம் என்பது பிறப்பிலே வரக்கூடிய விஷயமாக இருந்தாலும் ஜோதிட ரீதியாகவும் அவர்கள் ராசி அமைப்பை பொறுத்து அவர்களுடைய தைரியம் மற்றும் மன வலிமை அமையப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியாக ஒரு சிலரை யாரும் அவ்வளவு எளிதாக எதிர்க்க முடியாத அளவு பலம் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
பொதுவாகவே மேஷ ராசியினர் மனதளவில் மிகப்பெரிய அளவில் வலிமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதாவது எதையும் எதிர்த்து போராடி ஜெயிக்க கூடிய தன்மை இவர்களுக்கு இயல்பாக இருக்கும். இவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக அதிக இடங்களில் காணப்படுவார். இவர்களை சுற்றி உள்ளவர்கள் இவர்களை தனியே விட்டு சென்றாலும் இவர்கள் அந்த சூழலை சமாளித்து தனியாக போராடி வெற்றி காண்பார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான். சிம்ம ராசியிடம் இயற்கையாகவே ஆளுமை திறன் அதிகம் இருக்கும். இவர்களை பொறுத்தவரை இவர்களுடைய ஆளுமை விரும்பும் பல நண்பர்கள் கூட்டம் இருந்தாலும் அந்த நண்பர்களை சமயங்களில் இவர்களுக்கு எதிராக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை மற்றும் காத்திருந்து வெற்றி காண வேண்டும் என்ற எண்ணம் அதிக அளவில் இருக்கும். இவர்கள் யாருக்கும் எதற்கும் எந்த இடத்திலும் அச்சம் கொள்ள மாட்டார்கள்.
தனுசு:
குரு பகவான் உடைய வீடான தனுசு ராசி எப்பொழுதும் தங்களை மிகவும் நம்பக்கூடிய நபராக இருப்பார்கள். இவர்களிடத்தில் ஞானம் அதிக அளவில் இருக்கும். எந்த ஒரு சூழலிலும் இவர்கள் தன்னுடைய சாதூரியத்தால் சமாளித்து வெற்றி காணும் திறன் படைத்திருப்பார்கள். இவர்களை சுற்றி உள்ளவர்கள் இவர்களிடம் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக எதையும் பேசமாட்டார்கள் இருந்தாலும் நேரம் பார்த்து இவர்களுடைய வாதத்தை வைத்து எதிலும் வெற்றி காணும் வல்லமை படைத்தவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







