இந்த ஜாதக அமைப்புக் கொண்டவர்களை பார்த்தால் எதிரிகளே கண்டு அஞ்சுவார்கள்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு காரகத்தும் உள்ளது. அதனை நாம் படித்து தெரிந்து கொள்கின்ற பொழுது வியப்பையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும்.
அதைவிட மேலாக ஒருவருடைய எதிர்காலம் குணம் செயல், எல்லாவற்றையும் ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளமுடியும்.
அந்த வகையில், ஒரு சிலருக்கு எதிரிகளை கண்டு பயமே இருக்காது. இன்னும் சொல்ல போனால் அவர்கள் யாருக்கும் எதற்குமே அஞ்ச மாட்டார்கள். இதை நாம் ஜாதக ரீதியாக அறிந்துக் கொள்ள முடியும்.

அதாவது ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் சனிபகவானும் சூரியனும் நின்றால் அந்த ஜாதகர் எதிரியை கண்டு அஞ்சாதவர். எதிரிக்கே இவர் பயத்தை காண்பித்து விடுவார். இவருடைய எதிரிகள் இவரை கண்டு நடுங்குவார்கள்.
அதை போல், வழக்கு என்று வந்துவிட்டால் அங்கு இவர்களுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்புகள் உண்டு. இந்த அமைப்பு கொண்ட ஜாதகருக்கு எவ்வளவு பெரிய வியாதிகள் வந்தாலும் அவை உடனடியாக சரியாகும். இருப்பினும் இரவில் சற்று தூக்கம் பாதிப்படைவதை நாம் பார்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |