பொதுவாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் கோயில்களுக்கு பஞ்சம் இருக்காது.
அந்த வகையில் இலங்கையில் - யாழ்ப்பாணத்தில் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.
தமிழர்களின் பெருமைக்காக்கும் பல கோயில்களும் இங்கு காணப்படுகின்றன. அதில் ஒன்றாக தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் திருக்கோவில் பார்க்கப்படுகின்றது.
இந்த கோயில் யாழ்ப்பாணம் - வட மராட்சிப் பிரதேசத்தில் வல்வெட்டித்துறை நகரை அடுத்து அமைந்துள்ள தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாகிய கருணாகரத் தொண்டை மானோடு தொடர்புடையதாக “தொண்டைமானாறு” என்ற பெயர் அமைகிறது.
செல்வச் சந்நிதி முருகன் கோயிலில் நித்திய பூஜைகளின் போது அறுபத்தைந்து ஆலம் இலைகளில் பச்சரிசிப் பொங்கல், பயற்றங்கறி இவை இரண்டையும் வைத்து படைக்கிறார்கள்.
இதனை யாழ்.வாழ் பக்தர்கள் மரபு வழி வழிபாடாக செய்கிறார்கள். முருகனுக்கு படைத்த பின்னர் பக்தர்கள் ‘அமுது’ என்றும் ‘மருந்து’ என்றும் போற்றி உண்பார்கள். இந்த படையல் முறை முருகன் கதிர்காமருக்கு உணர்த்தப்பட்டது என நம்புகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |