அன்னதானமே ஒரு சிறந்த பரிகாரம்!
மனிதனாக பிறந்த அனைவருக்கும் எல்லாம் விஷயங்களும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை.அவன் வளர வளரவே உலகம் பற்றியும் அவனை பற்றியும் தெரிந்து கொள்கின்றான்.அப்படியாக நம்முடைய பிறப்பே கர்மவினையின் அடிப்படையில் பிறந்த ஒன்றாகும்.
மகான்கள் ரிஷிகள் எல்லாம் நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்ப வழிகாட்டுதல்களை அவர்கள் கொடுத்து இருக்கிறார்கள்.அதாவது ஒரு மனிதன் வளரும் வேளையில் தான் அவனுடைய கர்மவினையின் பலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
அப்படி கர்மவினைகள் அவனுக்கு பாடம் கற்பிப்பதோடு அவனுக்கு அன்றைய சுழலில் சில சங்கடங்களையும் கொடுத்து விடும்.அதற்கான தீர்வாகத்தான் வள்ளல்பெருமான் அவர்கள் சொல்கிறார் "அறிவு விளங்கிய ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு :என்பது அவருடைய திருவாக்காகும்.
அதாவது ஒவ்வொரு குடும்பங்களிலும் எதாவது ஒரு தீர்க்கமுடியாத துன்பம் துயரம் அச்சம் பயம் கவலை சோகம் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும்.
எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் தங்காத பணம் அதனால் வறுமை, தொழிலில் நஷ்டம்,கடன் சுமை,திருமணத்தடை, குழந்தை இல்லாமை, தீராத நோய்,கல்வி அறிவு போகம் இல்லாமல் வருத்தம் அடைதல், மேலும் பசி,பிணி,தாகம், எளிமை,பயம்,கொலை,கவலை போன்ற எந்த விதமான துன்பங்கள் வந்தாலும், அதற்கு பரிகாரம் ஒரே வழிதான், ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யம் செய்தால் மட்டுமே எல்லா வகையான துன்பங்களும் விலகி நன்மை பயக்கும் என்பது சத்தியம் என்கிறார்.
என்ன பிரச்சனை என்றாலும் அன்னதானம் அதாவது ஜீவகாருண்யம் செய்வோம் வளமுடன் வாழ்வோம்.இவை ஒன்று செய்தலே நம்முடைய கர்ம வினைகள் தீர்ந்து பிறப்பின் பயனை அடையலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |