மனிதர்கள் வாழ்நாளில் கட்டாயம் செல்ல வேண்டிய மூன்று இடங்கள்
இந்த உலகில் வாழ்வது தான் எத்தனை கடினம்.உறவினர்களால்,பிற மனிதர்களால் ஏன் சமயங்களில் நம்மால் நமக்கு பிரச்சனை உண்டாகி விடுகிறது.இறப்பு என்பது மாற்ற முடியாதது என்று தெரிந்தும்,தவறு செய்தால் பாவம் சேரும் என்று புரிந்தும் மனிதன் அவன் அகம்பாவத்தால் மிகவும் துன்புறுகின்றான்.
ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக பிறரை காயப்படுத்தாமல் வாழவேண்டும் என்று எண்ணுவதுண்டு.ஆனால் மனிதனுக்கு என்னதான் போதித்தாலும் அவனாக சில விஷயங்களை உணர்ந்தால் மட்டுமே அவன் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.
அப்படியாக மனிதன் அவன் வாழ்நாளில் கட்டாயம் சென்று காண வேண்டிய மூன்று இடங்கள் பற்றி பார்ப்போம்.
அரசு மருத்துவமனை:
நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளது.தனியார் மருத்துவமனைக்கு பெரும் பணம் படைத்தவர்களால் மட்டும் சுலபமாக செல்ல முடியும்.காசு படைத்தவர்களுக்கு எல்லாம் எளிதாக தெரியும்.ஆக மனிதன் அவனுடைய கர்வத்தை விட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று பணம் இல்லாமல் அவர்கள் உடலில் உண்டான குறைபாடுகளை சரி செய்ய காத்திருப்பதும் தங்கள் உடல் நிலை எப்படியாவது சரி ஆகிவிட்டால் அன்றாடம் வேலைபார்த்து என் குடும்பத்தை காப்பாற்றி விடுவேன் என்ற எண்ணத்தோடு அவர்கள் துடிப்பதையும் பார்த்தால் நமக்கு அன்றாட வாழ்க்கை புரியவரும்.வாழ்க்கை நகர்வதற்கே.எல்லா மனிதனுக்கும் எல்லாமும் மேலும் சமம் உரிமையும் உண்டு.
இறந்தவர்கள் வீடு:
பணம் படைத்தவன் வீட்டில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களுக்கு கவலை இல்லை.பணம் இருந்தால் போதும்.ஆனால் வாழ்க்கையின் உண்மைத்துவம் ஒரு ஏழை வீட்டில் நடத்த துக்கத்தில் புரிந்து கொள்ள முடியும்.
அதிலும் சிறு வயதில் கணவன் இறந்து விட்டால் பிள்ளைகளும் குடும்பமும் அடுத்து என்ன செய்வது என்று கண் கட்டி நிற்கும் காட்சியையும் அவர்கள் கடக்கும் அந்த நொடி பொழுதின் தன்மைபிக்கையை தான் எல்லோருக்கும் வர வேண்டும்.
இறுதி பயணம்:
மனிதன் இறுதி இடம் சுடுகாடு.ஆனால் சிலருக்கு அவன் இறந்தாலும் சிலர் அவன் மீது கொண்டுள்ள வன்மம் குறையாமல் இருப்பார்கள்.பணம் படைத்தவன் ஆடும் ஆட்டம் அடங்கும் ஒரே இடம் சுடுகாடு.மனிதன் உண்மை ஆகும் இடம் சுடுகாடு.
மனிதன் மனிதனாக உறங்கும் இடம் சுடுகாடு.வாழும் பொழுது மனிதன் அவன் ஆசைக்கு ஏற்ப பிடித்த உடைகள்,ஆபரணங்கள் வாங்கி அணிகின்றான்,ஆனால் அவன் இறந்தால் அவனை எரியூட்ட பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நெருப்பு அவர்களிடம் இல்லை.அவர்கள் அஸ்தியை கரைக்க அவர்களுக்கு என்று தனி ஜலம் இல்லை.ஆக மனிதன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பொழுது தானாகவே உணர்வுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
ஆக மனிதன் இந்த நொடி மட்டும் என்று ஆணவம் கொள்ளாமல் அவன் உணர்வுகளை சமநிலை கொண்டு வாழ்வது தான் அவன் இறுதி பயணம் சந்தோஷமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |