தொட்டது துலங்க உதவும் விஷ்ணு வழிபாடு.., வியாழக்கிழமை செய்யுங்கள்
மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார்.
வியாழக்கிழமை விஷ்ணு பகவானுக்கும், குருபகவானுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட நாள்.
இச்சிறப்புமிக்க வியாழக்கிழமையில் செய்யப்படும் சில வழிபாடுகள், துன்பங்களில் இருந்து விடுபட்டு விஷ்ணு பகவானின் அருளைப் பெறலாம்.
வியாழக்கிழமை மஞ்சள் சம்பந்தப்பட்ட வழிபாட்டைச் செய்தால் வாழ்வில் நிதி பிரச்சனைகள் ஏற்படாது.
மஞ்சள், விஷ்ணு பகவானுடன் நேரடியாக தொடர்புடையதால் வியாழக்கிழமை வழிபாட்டின்போது மஞ்சளை அர்ப்பணிப்பது பயனுள்ளது.
மஞ்சள் வழிபாடு
வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளிர்த்துவிட்டு, வாழை மரத்தின் அடியில் நீரை ஊற்றி அதன் கீழ் மஞ்சளை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைத்து, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
மேலும், வாழை மரத்தில் மஞ்சள் வைப்பதால் செல்வம் பெருகும், எதிர்மறை சக்திகள் அழிந்து போகும்.
அதேபோல், வியாழக்கிழமை அதிகாலையில் விநாயகரை வழிபட்டு, மஞ்சள் மாலையை சாற்றவும்.
வியாழக்கிழமை விநாயகர் வழிபாட்டின் மூலம் வேலைகளில் உள்ள தடைகள் நீங்கும். மேலும், வாழ்வில் வெற்றியும் கிடைக்கும்.
விஷ்ணு பகவான் துளசியை மிகவும் விரும்புவார் எனவே, வழிபாட்டின் போது, துளசி இலைகளில் மஞ்சள் பூசி அர்ப்பணிக்க வேண்டும்.
இந்த வழிபாட்டின் மூலம் விஷ்ணு பகவானின் அருளைப் பெற்று வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் பெருகும்.
பூஜை முடிந்ததும் மஞ்சள் பொடியை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் லட்சுமி, விஷ்ணுவின் அருளால் நிதி நெருக்கடிகள் நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |