முனிவரின் சாபத்தால் வெள்ளை நிறமாக மாறிய யானை
காசி நகரில் கங்கை கரையில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தார் துருவாச முனிவர்.அவரது பக்திக்கு மகிழ்ந்தார் சிவபெருமான்.தம் முடியில் உள்ள தெய்வீக மனம் கமலும் தாமரை மலரை முனிவருக்கு அருளினார்.
இறைவன் தந்த மலருடன் தேவலோகத்திற்கு வந்த முனிவர் அச்சமயம் தேவேந்திரன் அசுரர்களை வென்று வெற்றி விழா கொண்டாடிக் கொண்டிருந்தாள்.
அதோ வெள்ளை யானை மீது ஏறி பவனி வரும் தேவேந்திரனை பாருங்கள் முகத்தில் கர்வத்தையும் கண்களில் வெற்றியின் போதையும் என்று அங்கு இருந்தவர்கள் பேசி கொள்ள மறுபுறம் தேவர்கள் பவனி வரும் தங்கள் அரசனுக்கு பற்பல பொருட்களை காணிக்கையாக தந்தனர்.
துருவாச முனிவரும் தம்மிடமிருந்து தெய்வீக மலரை காணிக்கையாக கொடுத்தார்.வெற்றி போதையில் இருந்த அரசர் முனிவரின் பெருமையை மறந்து தெய்வீக மலரின் அருமையை அறியாது அதை யானையின் தலை மீது வைத்தான்.
தலைவனை போலவே வெற்றியின் கர்வத்தில் யானையும் சிக்கியிருந்தது தன் மீது இருந்த மலரை துதிக்கையால் எடுத்து கீழே போட காலால் நசுக்கியது சிதைத்தது. இதை கண்டு துருவாச முனிவர் சினம் கொண்டார்.
பாண்டிய மன்னன் ஒருவனால் உன் ஆட்சி அழியும் உன் வெள்ளையானை தன் தெய்வீக தன்மை இழந்து காட்டு யானையாக மாறும் என்று சாபம் தந்தார்.
அதன் பின்னர் தான் அந்த தவறை உணர்ந்தான் இந்திரன். முனிவரின் கால்களில் விழுந்து மன்னித்து வேண்டினான் மன்னிப்பது பெரியவர்களின் குணம் முனிவரும் மன்னித்தார்.
நூறு ஆண்டு கழிந்த பின் வெள்ளை யானையின் சாபம் நீங்கும் என்று விமோசனம் தந்தார். சாபத்தின் வேலை தொடங்கியது வெள்ளை யானை கருப்பு அணையாக மாறியது காட்டில் அலைந்து திரிந்தது.
100 ஆண்டுகள் முடிந்து கொண்டிருந்தன சாபம் நீங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது அச்சமயம் ஒருநாள் அந்த யானை கடம்பவனத்திற்குள் நுழைந்தது.
அங்குள்ள பொற்றாமரை குளத்தை பார்த்தது. குளத்தையும் நீரையும் கண்டால் எந்த யானையும் விடாது.
குளத்தில் இறங்கியது யானை குளிக்க தொடங்கியது குளித்த யானை கருநிறம் மறைந்தது வெண்மை படர்ந்தது.
பழைய தெய்வீக ஒளி வீச தொடங்கியது நீராட வந்த வெள்ளை யானை அங்கிருந்து லிங்கத்தை பொற்றாமரைகளால் அர்ச்சித்து வழிபட்டது.
சோமசுந்தரனின் அருள் பெற்றது சாபம் நீங்கியது தேவலோகம் சென்றதும் மீண்டும் தேவேந்திரனின் யானை தெய்வீகப் பொலிவுடன் வாழ்ந்து வந்தது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |