குரு செவ்வாய் சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் பெறும் ராசிகள் யார்?
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி குரு மற்றும் செவ்வாய் இணைந்து கேந்திர யோகத்தை உருவாக்க இருக்கிறது. இந்த யோகம் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கிறது. இந்த யோகமானது குரு செவ்வாய் நேரடியாக சந்திக்காமல் உருவாக்குவது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கேந்திர யோகத்தால் 12 ராசிகளும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை அடைந்தாலும் குறிப்பிட சில ஆசிரியர் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை சந்திக்கப் போகிறார்கள் அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நன்மைகள் காத்திருக்கிறது. கையில் எடுக்கக்கூடிய காரியங்கள் எல்லாம் இவர்களுக்கு வெற்றியில் முடியும். கூடுதல் வருமானத்திற்கான நிறைய வழிமுறைகளை இவர்கள் கையாள போகிறார்கள். நிதிநிலைமை அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய வாய்ப்புகள் தேடி வர போகிறது. வேலையில் வருகின்ற வாய்ப்புகளை இவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை சந்திக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். இருப்பினும் வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்வதும் மிக மிக அவசியமானதாகவும் இருக்கிறது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலீடு செய்வதற்கான நல்ல நேரமாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |