புதுவருடப் பிறப்பும் சுப நேரங்களும்

By Kirthiga Apr 11, 2024 05:14 PM GMT
Report

சித்திரை புத்தாண்டு என்பது தமிழர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பண்டிகையாகும்.

தமிழ் வருடங்கள் மொத்தமாக 60 இருக்கிறது. அதில் தற்போது நாங்கள் இருப்பது சோபகிருது வருடத்தில் ஆகும்.

புதுவருடப் பிறப்பும் சுப நேரங்களும் | Time Of Krodhi Varudam

நாளை மறுநாள் குரோத வருடம் பிறக்கிறது. இந்த ஆண்டு பலருக்கும் பல வகையில் நன்மைகளை அள்ளித்தர போக்கின்றது. அந்தவகையில் குரோத வருடமானது எப்போது பிறக்கிறது எனவும் மருத்து நீர் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து கோயிலுக்கு செல்லும் நேரம் குறித்து  பார்க்கலாம்.

வருடம் பிறக்கும் நேரம்

13.04.2024 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் குரோதி வருடம் பிறக்கின்றது.   

மருத்து நீர் வைக்கும் நேரம்

13.04.2024 சனிக்கிழமை மாலை 04.15 முதல் நள்ளிரவு 12.15 வரை தேய்க்கலாம்.

தலை - ஆலிலை, கால் - புங்கை இலை, திசை வடக்கு.

கை விஷேடம் வழங்கும் நேரம்

14 ஆம் திகதி காலை 07.57 முதல் காலை 09.56 வரையில் வழங்கலாம். அல்லது 14 ஆம் திகதி காலை 09.59 முதல் நண்பகல் 12.01 வரையில் வழங்கலாம்.   

அணியும் ஆபரணங்கள்

நீலக்கல் பதித்த அல்லது வைரக்கல் பதித்த ஆபரணங்களை அணியலாம்.  

அணியும் ஆடைகள்

கபிலம் அல்லது வெள்ளை நிற ஆடையை அணியலாம்.   

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் (01ஆம், 02ஆம் பாதங்கள்), சித்திரை, விசாகம் (04ஆம் பாதம்), அனுஷம், கேட்டை, அவிட்டம்.   

வியாபாரம், புதிய கணக்குகள் ஆரம்பிக்கும் நேரம்

15.04.2024 திங்கட்கிழமை காலை 09.08 தொடக்கம் காலை 09.51 வரை அல்லது அதே நாள் காலை 09.55 தொடக்கம் காலை 10.31 வரையில் ஆரம்பிக்கலாம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US