தீராத பிரச்சனைகள் தீர திங்கட்கிழமை விநாயகர் வழிபாடு
எந்த காரியம் தொடங்கினாலும் விநாயகரை வழிபடாமல் யாரும் தொடங்குவது இல்லை.மேலும் எல்லா இடங்களிலும் விநாயகர் படம் இல்லாத வீடுகளோ தொழில் இடங்களையோ பார்த்தது இல்லை.
இந்த விநாயகர் வழிபாட்டை நாம் திங்கட்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள்ளோ இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டிற்கு நம்முடைய வீட்டில் விநாயகரின் படமோ, சிலையோ வேண்டும். இதனோடு அருகம்புல் எடுத்து கொள்ள வேண்டும்.
21 அருகம் புல்லை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நுனியாக இருக்கும் 21 அருகம்புல்லை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் கிளைகள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் கிளைகள் இருப்பது போல் 21 அருகம்புல்லை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த 21 அருகம்புல்லையும் ஒரு நூலை வைத்து கட்டி விநாயகப் பெருமானுக்கு முன்பாக வைத்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ பிரச்சனை என்னவோ அதை விநாயகப் பெருமானிடம் கூற வேண்டும்.
மேலும் விநாயகருக்கு பிடித்தமான நெய்வேத்தியமாக வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருள் உலர் திராட்சை, பேரிச்சம்பழம், கற்கண்டு, அவலீ, பொறி கடலை, போன்ற ஏதாவது ஒன்றை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இவை வைத்து தொடர்ந்து 21 திங்கட்கிழமைகள் 21 அருகம்புல்லை வைத்து விநாயகருக்கு வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல்களும் பிரச்சனைகளும் தீரும்.
ஒரு வாரம் வைத்த அருகம்புல்லை அடுத்த வாரம் எடுத்து நம்முடைய வீட்டு நிலை வாசலில் வைத்துக் கொள்ளலாம்.
இப்படி நிலை வாசலில் வைப்பதன் மூலம் வீட்டிற்குள் எந்தவித தீய சக்திகளும் வராது என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டிலும் எந்த வித தீய சக்திகளும் இருக்காது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |