வீட்டில் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள்

By Sakthi Raj Oct 24, 2024 07:09 AM GMT
Report

பணம் மனிதனின் மிக தேவையான ஒரு விஷயம்.பணம் இருந்தால் நாம் அன்றாட வாழ்க்கையே நகர்த்த முடியும்.அப்படியாக சிலருக்கு பணத்தை சிக்கனமாக வைத்து செலவு செய்வார்கள்.சிலருக்கு என்னதான் சிக்கனமாக இருக்க முயற்சி செய்தாலும் அவர்கள் கை மீறி சில செலவுகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.

அப்படி இருக்க வீட்டில் பண தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க சூழ்நிலைகள் ஒரு காரணமாக இருந்தாலும் இறை அருள் மிகவும் அவசியம்.அந்த வகையில் வீட்டில் பண புழக்கம் அதிகமாகவும் சிறப்பாக இருக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்களை பற்றி பார்ப்போம்.

வீட்டில் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள் | Tips To Save Money At Home

வீட்டில் சேமிப்பு என்பது மிக முக்கியும்.பெண்கள் தங்கள் கணவன் கொடுக்கும் பணத்தில் இருந்து சிறுக சிறுக சமயலைறையில் சேர்த்து வைக்கும் வழக்கம் உண்டு.அதாவது மசால் பொருட்கள் சர்க்கரை வைக்கும் இடங்களில் அவர்கள் தங்கள் குடும்ப தேவைக்காக சேமித்து வைப்பார்கள்.

அதோடு சேர்த்து வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு உண்டியல் போன்ற விஷயங்கள் சேமிப்பு செய்வோம்.இவ்வாறு செய்வதால் பணம் தேவை படும் பொழுது அதில் இருந்து எடுத்து உபயோகிக்கும் பழக்கம் இருந்தது.

நினைத்ததை சாதிக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பைரவர் மந்திரம்

நினைத்ததை சாதிக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பைரவர் மந்திரம்

அப்படியாக நாம் சேமித்து வைக்கும் பணத்தை எண்ணி கொண்டே இருப்பது நல்லது அல்ல.மேலும் பணத்தை வெளிப்படையாக இல்லாமல் மறைத்து வைத்து சேமிப்பவர்களுக்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

சமையலறையில் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ள பெண்கள் கையில் பணம் ஏராளமாக சேரும் யோகம் உண்டு.பெண்களுடைய கரங்களில் சுக்கிரன் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. இப்படி, சுக்கிரனின் அருள் இருக்கும் பெண்கள் பணத்தை சேர்த்து வைப்பதில் கவனமாக இருப்பார்கள்.

வீட்டில் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள் | Tips To Save Money At Home

அவர்களிடம் பணம் சேமிக்கும் குணம் அதிகமாக இருக்கும். இவ்வாறு இருக்கும் பொழுது நாம் சமையல் பொருட்களை தேவை இல்லாமல் வீணாக்குவது நல்லது அல்ல.அப்படி வீண் செய்தால் பணம் கை சேராமல் இருக்கும்.

இதனால் வீட்டில் பணம் சேராமல் செலவாகிக் கொண்டே இருக்கும்.மேலும் சமையல் செய்யும் பொழுது நாம் கவனமாக இருக்க வேண்டும்.சமையல் செய்யும்போது அடிக்கடி அடி பிடிப்பது, சமையலுக்கு பயன்படுத்தப்படும் கரித்துணி எரிந்து போவது ஆகிய சம்பவங்கள் வீட்டில் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த மாதிரி செயல்கள் அடிக்கடி நடந்தால் வீட்டில் பணம் சேராது. அதோடு வீடும் சுத்தமாக இருக்க வேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது லட்சுமி தேவியின் அருள் கிடைத்து பண தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US