ஆவணி திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய திருச்செந்தூர் முருகன்

By Yashini Aug 30, 2024 10:31 AM GMT
Report

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அந்தவகையில், 7ஆம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 

ஆவணி திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய திருச்செந்தூர் முருகன் | Tiruchendur Avani Festival 2024

இதனைத்தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

மேலும், அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காலை 8.45 மணிக்கு சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார்.

ஆவணி திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய திருச்செந்தூர் முருகன் | Tiruchendur Avani Festival 2024

அங்கு தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையின் கட்டளை மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

பின் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US