திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்- என்ன தெரியுமா?
முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. அதில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடியது திருச்செந்தூர். இந்த முருகப் பெருமானை தரிசிக்க பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படியாக திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களுக்கு ஒரு அற்புதமான செய்தி காத்திருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் உள்ள பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்ய கொரோனா பரவலுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த பக்தர் மனுவில் திருச்செந்தூரில் இருக்கும் பஞ்சலிங்கத்திற்கு முறையாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதில்லை என்றும் பக்தர்கள் கொரோனா காலத்திற்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை என்றும் தனது மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கோயில் தரப்பில் இருந்து பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யும் பாதை மிகவும் குறுகலாக இருப்பதாகவும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பை கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாக தரப்பில் தெரிவித்திருந்தார்கள்.
மேலும் ஸ்ரீரங்கம் திருப்பதி கோயில்களில் குறுகலான பாதைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக மனதாரர் தரப்பு வாதிடப்பட்டது. இதற்கு பதில் அளித்த கோயில் நிர்வாகம் கூட்டம் குறைவாக இருந்தால் பஞ்சலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று உறுதி அளித்தனர்.

நவராத்திரி: துர்கா தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்- அதிர்ஷ்டம் எப்பொழுதும் இவர்களுக்கு இருக்குமாம்
பஞ்சலிங்கத்திற்கு மூலவர் சுப்பிரமணியர் பூஜை செய்வார் என்பது ஐதீகம் என்பதால் திருவிளக்கு மட்டுமே ஏற்றப்படுவதாகவும். இது ஆகம விதிகள் மீறப்படவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்கள்.
இதை அடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வருகின்ற கூட்டத்தைப் பொறுத்து பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க கோவில் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







