நவராத்திரி: துர்கா தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்- அதிர்ஷ்டம் எப்பொழுதும் இவர்களுக்கு இருக்குமாம்
இந்து மதத்தில் கொண்டாட கூடிய முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்று. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை நாம் சாரதா நவராத்திரி என்று கொண்டாடிவருகின்றோம். அப்படியாக இந்த நவராத்திரி என்பது சக்தி தத்துவத்தை உணர்த்தக்கூடிய தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் விழாவாகும்.
இந்த 9 நாட்கள் விழாவின் பொழுது அம்பிகைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து நடத்தப்படும். பொதுவாக துர்க்கை என்றால் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றும் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவள் என்று நாம் அனைவரும் தெரிந்து இருப்போம்.
அந்த வகையில் ஜோதிடத்தில் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகள் துர்கா தேவியின் அருளை பரிபூரணமாக பெற்று அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சினையை சமாளித்து வாழ்வதாக சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு துர்கா தேவியின் அருள் எப்போதும் பரிபூரணமாக கிடைக்குமாம். ஆதலால் இவர்கள் துர்கா தேவியின் அருளை கொண்டு வருகின்ற பிரச்சனையை மிக எளிதாக கடந்து சவால்களை சமாளித்து முன்னேறக் கூடிய பக்குவம் இவர்களுக்கு கிடைக்கிறது. மேலும் இவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு செயல்படுவதற்கு துர்கையின் அருளும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கடகம்:
கடக ராசியினருக்கு துர்க்கையின் அருள் எப்பொழுதும் துணை நின்று வழி நடத்துவதாக சொல்லப்படுகிறது. அம்பாளின் அருளால் இவர்கள் கருணை அன்பு பாசத்தோடு பழகுவதை நாம் காணமுடியும். அதேபோல் இக்கட்டான சூழ்நிலை இவர்களுக்கு வந்தாலும் துர்கா தேவியின் பரிபூரண அருளால் அதை சமாளித்து இவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
கன்னி:
கன்னி ராசியினர் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருந்தாலும் இவர்களை துர்க்கை அம்மன் எப்பொழுதும் உடன் நின்று காப்பாற்றுகிறாள். ஆதலால் இவர்களுக்கு எவ்வளவு குழப்பமான சூழல்கள் ஏற்பட்டாலும் துர்கா தேவியின் அருளால் இவர்கள் வருகின்ற பிரச்சனையில் இருந்து மீண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகிறார்கள்.
தனுசு:
தனுசு ராசியினர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதிலும் அம்பாள் வழிபாட்டிற்கு இவர்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேபோல் அம்பாளின் பரிபூரண அருளும் இவர்களுக்கு எப்பொழுதும் இருக்குமாம். மேலும், எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் இவர்களை ஏதோ ஒரு தெய்வம் உடன் நின்று காப்பாற்றுவதை அவர்களால் உணர முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







