இந்த 3 ராசிக்காரர்கள் கட்டாயம் காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது நல்லதாம்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் கை, கால்களில் கயிறுகளை கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது சுவாமி பாதத்தில் கயிறுகளை வைத்து வழிபாடு செய்து நமக்கு திருஷ்டிகள் மற்றும் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக நாம் கயிறுகள் கட்டுவோம். மேலும், கயிறு பல வண்ணங்களில் இருக்கிறது.
அதனால் ஒவ்வொருவரும் அவர்களின் ராசிகளுக்கு ஏற்ப கயிறுகளை வாங்கி கட்டிக்கொள்வார்கள். இருந்தாலும் சிலருக்கு கருப்பு நிற கயிறுகள் ஆகாது என்கிறார்கள். இருப்பினும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கருப்பு நிறத்தில் கயிறுகள் கட்டுவதால் நல்ல பலன்கள் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
பொதுவாக கருப்பு நிறத்தில் கயிறு கட்டுபவர்கள் கருப்பு நிறத்துடன் வேறு எந்த நிற கயிறுகளையும் கட்டக்கூடாது. இவ்வாறு கட்டுவதன் வழியாக நமக்கு எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். அதோடு கருப்பு கயிறுகளை மகரம், துலாம் மற்றும் கும்ப ராசியினர் கட்டுவது அவர்களுக்கு நன்மை அளிக்கும்.
அதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த ஒரு தயக்கமும் சந்தேகமும் இல்லாமல் கட்டாயம் கால்களில் கைகளில் கருப்பு நிற கயிறுகளை அணியலாம். இந்த ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிற கயிறுகளை அணிய வேண்டும் என்று நினைத்தால் பெண்களாக இருந்தால் சனிக்கிழமை அன்று இடது கை மற்றும் காலில் கருப்பு நூலை கட்டிக் கொள்ளலாம்.
ஆண்களாக இருந்தால் சனிக்கிழமை அன்று வலது கை மற்றும் கால்களில் கருப்பு கயிலை கட்டிக் கொள்ளலாம். மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்கள் பலவீனமாக இருந்தால் இந்த கருப்பு நிற கயிறு கட்டுவதன் மூலம் அவர்களுக்கு நற்பலன்கள் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







