திருக்கார்த்திகை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த திருப்புகழ்
கார்த்திகை மாதத்தில் மிக முக்கியமான நாள் திருக்கார்த்திகை.அன்றைய தினத்தில் நாம் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வோம்.மேலும்,திருக்கார்த்திகை திருநாள் அன்று தான் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற படும்.
அந்த தரிசனதை காண இந்தியாவில் பல இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள்.அப்படியாக நாம் திருக்கார்த்திகை திருநாளில் விளக்குகள் ஏற்றி வழிபாடும் செய்யும் பொழுது அண்ணாமலையாரின் அருளையும் மலை மேல் காட்சி தரும் திருகுமாரனாகிய முருகப்பெருமானின் அருளை பெறவும் பாட வேண்டிய திருப்புகழை பற்றி பார்ப்போம்.
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம
இறைவன் பாடல்களுக்கு மந்திரத்திற்கும் எப்பொழுது தனி சக்தி உண்டு.நாம் மனதில் நினைத்த காரியம் நடக்க முழுமனதாரா இன்று தீபம் ஏற்றி இந்த திருப்புகழை பாட எதிர்ப்பாராத அதிசயங்கள் வாழ்வில் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |