திருமண கோலத்தில் விநாயகர்
தமிழகத்தில் விநாயகர் என்றால் பிரம்மச்சாரியாகத்தான் எல்லா கோயில்களிலும் காட்சி தருகிறார்.
ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் உள்ள "வெயிலுகந்த விநாயகர்" தன் மனைவிகளான சித்தி புத்தியுடன் காட்சி தருகிறார்.
இவரது திருமண கோலத்தை பார்க்க நமக்கும் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அப்படியாக இந்த வெயிலுகந்த விநாயகரை பற்றி விரிவாக பார்ப்போம்.
மிகவும் ஆணவம் கொண்டவர் தட்சன். அவர் மகளான தாட்சாயிணியை சிவபெருமான் மணமுடித்துக் கொண்டார்.
ஒரு முறை தட்சன் தேவர்களை அழைத்து யாகம் நடத்த, அதற்கு தன் மருமகனான சிவபெருமானை மட்டும் அவர் அழைக்கவில்லை.
ஆனால், அந்த யாகத்திற்கு சூரிய பகவானை தட்சன் அழைக்க, சூரிய பகவானும் அந்த யாகத்தில் கலந்து கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் சூரியபகவான் மீது மிகுந்த சினம் கொண்டார்.
சூரிய பகவான் அதற்கு பரிகாரமாக பாண்டிய நாட்டில் கீழ கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புனவாசல் ஆகிய தலங்களுக்கு அருகில் உள்ள வன்னிமந்தாரவனம் என பகுதிக்கு வந்தார்.
இங்கு வந்து இங்குள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டு தன்னுடைய பாவத்தை போக்குவதற்கு வேண்டுதலில் ஈடுபட்டார். இவருடைய தவத்தால் மணமகிழிந்த விநாயகர் அவர் முன் காட்சி அளித்து பாவத்தை போக்கினார்.
மேலும் சூரியவாகவான் தனக்கு அருள் புரிந்தது போல பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வணக்க, அதோடு விநாயகரின் திருமேனி மீது தனது ஒளி கதிர்கள் விழுந்து வணங்க வழிகாட்டுமாறு விநாயகரிடம் வரம் பெற்றார்
இதனால் இவர் "வெயிலுகந்த விநாயகர் "என்ற பெயர் பெற்றார். இவர் மீது தட்சிணாயன காலத்தில் தெற்கு பகுதிகளும், உத்திராயண காலத்தில் வடக்கு பகுதிகளும் சூரியக் கதிர்கள் விழுகிறது
தமிழகத்தில் முதல் முதலாக விநாயகருக்கு சித்தி புத்தி தேவியர் உடன் திருமணம் இங்கே தான் நடக்கிறது. சதுர்த்திக்கு முதல் நாள் நடக்கும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விநாயகரை நாம் தரிசித்தால் திருமணத்தடை விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என் பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆதலால் நாமும் இவரை வணங்கி வாழ்வில் உள்ள அனைத்து தடைகள் விலகி அருள் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |