திருமணத் தடை நீக்கி, பிள்ளை வரம் தரும் உத்வாகநாதர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் கீழே திருமணஞ்சேரி என்ற ஊரில் உத்வாகநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மூலவரின் பெயர் உத்வாகநாதர் அல்லது அருள் வல்லநாதர் தாயாரின் பெயர் கோகிலாாம்பாள். தலவிருட்சமாக கருஊமத்தை மரம், வன்னி மரம், கொன்றை மரம் ஆகியவை உள்ளன.
எழுகடல் தீர்த்தம் இங்குப் புனிதத் தீர்த்தம் ஆகும் இதனை வடமொழியில் சப்த சாகரம் என்று கூறுகின்றனர்.அப்பர் சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சோழநாட்டின் வடகரையில் உள்ள 274 சிவாலயங்களில் உத்வாகநாதர் கோவில் 25 ஆவது சிவத்தலம் ஆகும் இக்கோவிலுக்கு அருகே மேலத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது.
வழிபாட்டின் பலன்
உத்வாகநாதர் கோவிலில் திருமண தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து இறைவனை வணங்கி திருமணத் தடை நீங்கி சிறப்பான இல்லற வாழ்க்கை பெறுகின்றனர். பிரிந்து வாழும் தம்பதியர்
கோயில் அமைப்பு
உத்வாகநாதர் கோயில் வாயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே சென்றால் கொடிமரம் பலிபீடம் நந்தி ஆகியவை உள்ளன. கொடிமரத்திலும் கணபதி உள்ளார். கருவறைக்கு வலப்புறம் ஓர் விநாயகர் சன்னதியும் இடப்புறம் நடராஜர் சன்னதியும் அம்மன் சன்னதியும் உள்ளன.
மூலவரின் வலப்புறம் கல்யாணசுந்தரர் சன்னதி சன்னதியும் இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளன. கல்யாண சுந்தரர் சன்னதியில் சிவன் பார்வதியின் வலது கரத்தைப் பிடித்த படி மணக்கோலத்தில் செப்புச் சிலை வடிவில் உள்ளார். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் மாப்பிள்ளை சாமி என்றும் கல்யாணசுந்தரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
குபேரக் கிணறு
உத்வாகநாதர் கோயிலில் குபேர கிணறு என்ற பெயரில் ஒரு கிணறு காணப்படுகின்றது. அதை இப்போது உண்டியலாகவும் பயன்படுத்துகின்றனர். இந்திரன், பைரவன், குபேரன் ஆகியோர் பழைய பௌத்தக் கோயில் கடவுளர் ஆவர். பௌத்த கோயில்களில் குபேரனுக்கு தனி வழிபாடுகள் உண்டு. சைவப் பேரெழுச்சிக்கு பின்பு குபேர வழிபாடு செல்வாக்கிழந்து போயிற்று
திருச் சுற்றுத் தெய்வங்கள்
உத்வாகநாதர் கோவிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. கோஷ்டத்தில் கல்லால மரமும் ஜனகாதி முனிவர்களும் இல்லாத தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி இருக்கின்றார்.தென்கிழக்கு மூலையில் திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் இருந்து வரிசையாக பல தெய்வங்கள் உள்ளன. முதலில் வைரவரும் பின்பு சனி பகவானும் காட்சி தருகின்றனர். இதனைத் தொடர்ந்து பச்சையப்னும் பச்சை நாயகி அம்மனும் தனித்தனி சிலைகளாக காணப்படுகின்றனர்.
பச்சைநாயகியான பச்சை தாரா
பௌத்தர்கள் லிங்க ரூபத்தில் இந்திரனையும் பெண் புத்தரான பச்சை தாராவையும் தங்கள் மடாலயங்களில் சிலையாக வடித்து வைத்திருந்தனர். உத்வாகநாதர் கோவில் வரலாற்றை எடுத்துக் கூறிய ஒரு சிவாச்சாரியார் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் பழைய கோவில் ஒன்று இருந்ததாகவும் அந்த கோவில் சிதிலமடைந்து போனதால் அங்கிருந்த இந்த இரண்டு தெய்வங்களும் அத் தெய்வங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
தற்போது வடமொழியில் ருத்ரவனேஸ்வரர் என்றும் ருத்ரவனேஸ்வரி என்றும் பச்சை நாதரையும் பச்சைநாயகியையும் அழைக்கின்றனர். வேறு சில சிவன் கோவில்களிலும் பச்சை நாதர், பச்சைநாயகி அம்மன் தனியாகத் திருச்சுற்றில் சனீஸ்வரனுக்கு அருள் இருப்பதைப் பார்க்கலாம்.
இவ்வாறு பௌத்த கோவில்கள் சிதிலமடையும்போது அங்கிருக்கும் பச்சை தாராவை சிவன் கோவில்களில் பச்சையம்மன் அல்லது பச்சை நாயகி என்ற பெயரில் வைப்பது கொண்டு வந்து வைப்பது மரபு
திருவிழாக்கள்
உத்வாகநாதர் கோவிலில் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தன்று திருக்கல்யாண விழா மூன்று நாட்கள் நடைபெறும். இது தவிர ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறும். மாதம் இருமுறை பிரதோஷ பூஜைக்கு அதிக பக்தர்கள் கூடுவர். பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களில் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும்.
திருமணப் பரிகாரம்
உத்வாகநாதர் கோயிலுக்கு திருமணத் தடை , தோஷம் உள்ளவர்கள் வந்து சாமிக்கு மாலை சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி விட்டு அர்ச்சகர் அவருக்கு கழுத்தில் அணிவிக்கும் மாலையுடன் கோவிலை சுற்றி வணங்கி வந்து பின்பு அந்த மாலையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
வீட்டிற்குச் சென்றதும் முகம் கை கால் கழுவி மாலையைத் திரும்ப கழுத்தில் அணிந்து வீட்டு சாமிக்குப் பூஜை செய்து வணங்க வேண்டும். பின்பு அந்த மாலையை ஒரு ஆணியில் தொங்கி விட வேண்டும். இவருக்கு 90 நாட்களில் திருமணம் நடந்து விடும்.
பின்பு அவர் தன் வாழ்க்கைத் துணையுடன் இந்த மாலையையும் எடுத்துக்கொண்டு தண்ணீரில் விட்டு விட்டு பின்பு சன்னதிக்குள் சென்று அர்ச்சனை செய்து சிவபெருமானை வணங்கி வர வேண்டும்.
கோகிலாம்பாள்
கீழ் திருமணஞ்சேரியில் அம்பாள் கோ / பசு வடிவில் இருந்து அம்பாளாக மாறியதால் கோகிலாம்பாள் என்ற பெயர் வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். கோகிலம் என்றால் குயில். எனவே இப் பெயர்க் காரணம் குறித்து மேலும் ஆய்வுக்குரியது. உத்வாகநாதர் கோயிலில் அம்மன் ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டுத் தலையை ஒரு புறம் சாய்த்து லலிதாசனத்தில் அரசி போல் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றாள். மணப்பெண்ணை போல் நாணிக் கோணி காணப்படவில்லை.
பிற்காலத்திய செப்புத்திருமேனியில் மணப்பெண் போல் தோண்றுகிறாள். இவளுக்கென்று தனி சன்னதி மற்றும் விமானம் கிடையாது. கோயில் திருச்சுற்றில் பச்சையம்மன் நின்ற கோலத்தில் உள்ளாள்.
மங்கள ராகு
உத்வாகநாதர் கோயில் சாமி சந்நிதியின் கோஷ்டத்தில் மேற்கே லிங்கோத்பவரும் தெற்கே தட்சினா மூர்த்தியும் வடக்கே துர்க்கையும் இருப்பது மரபு. ஆனால் இங்கே ஒரே திசையில் நான்கு கோஷ்டங்களில் நாகதேவன் பிரம்மதேவன் கங்காதரன் துர்க்கை ஆகியோர் வரிசையாக காணப்படுகின்றனர்.
இவர்களில் நாக தேவனை மனித முகமும் கவச குண்டலமும் கொண்டிருக்கும் மங்கள ராகு என்ற பெயரில் அழைக்கின்றனர். ராகு கேதுக்களால் கர்ப்ப தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் மங்கள ராகுவை வணங்கி இத்தோஷங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று மகிழ்ச்சியாக வளர்க்கலாம். குழந்தை வரம் வேண்டுவோர் கோவில் தீர்த்தத்தில் நீராடி இங்குள்ள ராகு பகவானுக்கு பால் பொங்கல் நிவேதனம் செய்து வீட்டுக்குச் செல்ல வேண்டும் ஆகும்
கல்யாண அர்ச்சனை
கீழ்த் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரருக்கு திருமண பிரார்த்த கல்யாண அர்ச்சனை செய்தாலும் திருமணம் கைகூடிவரும் இந்த அர்ச்சனையை திருமணம் நடைபெறுவதற்காகவும் செய்யலாம் நடைபெற்ற பின்பும் செய்யலாம். இரண்டு மாலை இரண்டு தேங்காய் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு சூடம் எலுமிச்சம்பழம் சர்க்கரை ஆகியவற்றை வாங்கி வந்து சிவபெருமானுக்கு செய்யும் அர்ச்சனையே கல்யாண அர்ச்சனையாகும்.
இந்த அர்ச்சனை செய்வோர் திருமணத்திற்கு நேர்ச்சை செய்பவர் ஒரு பக்கமும் திருமணம் முடிந்தோர் மறுபக்கமும் ஆக அமர்ந்து கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படும் எலுமிச்சம் பழத்தை எலுமிச்சம் பழத்தை காலையில் உப்பு சர்க்கரை சேர்க்காமல் பிழிந்து குடித்து விட வேண்டும்.
குழந்தை வரம்
குழந்தை வரம் வேண்டுவோர் உத்வாகநாதர் கோயிலுக்கு அமாவாசை அன்றைக்கு வந்து மனித முகத்துடன் கவச குண்டலத்துடன் இருக்கும் மங்கள ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்யவேண்டும். அத்துடன் பாலாபிஷேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் ஆண் குழந்தை பிறந்தவர்கள் சாமிக்கு தண்டையும் பெண் குழந்தை பிறந்தவர்கள் கொலுசும் வாங்கிக் காணிக்கை செலுத்துகின்றனர் . சிலர் மணி வாங்கிக் கட்டுவர். வேறு சிலர் விளக்குகள் வாங்கி காணிக்கையாகத் தருகின்றனர்.
கதை 1.
பசுவை மணந்த கதை
உத்வாகநாத்ர் சிவன் கோயில் பழைய பச்சை தாரா (பௌத்த) கோயிலுக்கு ஒன்றரை கிலோ மீட்டருக்கு அருகே கட்டப்பட்டது. அக்காலத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவன் கோவில்களுக்கு மக்களிடம் சைவ சமயப் பற்றை வளர்த்து உறுதி செய்யும் நோக்கில் ஸ்தல புராணக் கதைகள் உருவாக்கப்பட்டன. இந்த கோவிலுக்கும் ஒரு கதை உள்ளது.
கதை ஒன்று
திருக்கைலாயத்தில் உமாதேவிக்கு திடீரென்று மனிதர்களைப் போல திருமண நிகழ்ச்சிகள் செய்து மீண்டும் சிவபெருமானைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு வினோத ஆசை ஏற்பட்டது. அவர் எம்பெருமானிடம் தனக்கு இவ்வாறு ஒரு வரம் தர வேண்டும் என்று கேட்டார். சிவபெருமானும் சரி என்று ஒப்புக் கொண்டு அமைதியாக இருந்து விட்டார்.
சில நாட்கள் கழிந்ததும் உமா தேவியாருக்கு சிவபெருமான் மீது மிகுந்த கோபம் வந்தது. நாம் கேட்டது கிடைக்கவில்லையே என்ற ஆற்றாமையில் இவர் சிவபெருமானிடம் சற்று அலட்சியமாக நடந்து கொண்டார்.
உமையாளின் கோபத்தை உணர்ந்த சிவபெருமான் 'நீ பூலோகத்தில் போய் பசுவாகப் பிறக்க கடவாய்' என்று சாபமிட்டார். சாபம் பெற்ற உமாதேவி பூலோகத்திற்கு வந்து பசுவாக அலைந்து திரிந்தார். ஒரு நாள் பூமிக்குள் புதைந்திருந்த சிவலிங்கத்தின் மீது தன்னை அறியாமல் பாலைச் சுரந்ததால் சிவபெருமான் பிரதட்சணமாகி பார்வதியை மணந்து கொண்டார்.
ஒன்றில் ஒன்பது
ஒரு கதையை 9 பேருக்கு சொன்னது போல என்று ஒரு பழமொழி உண்டு. இப்பழமொழி உண்மையாகும் விதத்தில் இப்பகுதியில் உள்ள ஒன்பது கோயில்களுக்கும் சேர்த்து ஒரு கதை சொல்லப்படுகின்றது. ஒரு கதையில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்த இடம் ஒவ்வொரு கோவிலாக இன்றைக்கு விளங்குகின்றது.
தேரழுந்தூரில் சிவன் பார்வதியை பசுவாகப் போகும்படி சபித்தார். பார்வதி பசுவாக சுற்றி வரும் வேளையில் பசுக்களை மேய்க்கும் இடையனாக அவரது சகோதரர் பெருமாள் கோமல் கிராமத்திற்கு வந்தார். கோமல் கிராமத்தில் பசுக்கள் சுற்றித் திரிந்தன. அப்போது ஒரு பசு ஒரு கல்லின் மீது காலை வைத்து பாலை சுரந்தது.
அதன் குளம்படி பட்டதும் அது சிவலிங்கம் என்பது தெரியவந்தது. எனவே இவ்வூர் திருக்குளம்பு என்று அழைக்கப்பட்டது சிவபெருமான் பசுவுக்கு முக்தி கொடுத்தார். இவ்வூர் திருவாவடுதுறை ஆகும். அடுத்து, திருந்துருத்தி என்று அழைக்கப்படும் குத்தாலம் என்ற ஊரில் பரத மகரிஷி யாகம் ஒன்றை நடத்தினார்.
அந்த யாகத்தில் இருந்து உமாதேவி தோன்றினார். அடுத்து திருவேள்விக்குடியில் உமாதேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்வதற்காக திருமண வேள்வி நடத்தப்பட்டது. பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கைகளில் காப்பு கட்டப்பட்டது. இதனை கங்கண தாரணம் என்பர். இங்கு முளைப்பாலிகையும் வளர்க்கப்பட்டது.
மணமகனை எதிர்கொண்டு அழைக்க எதிர்கொள்பாடிக்கு மணமகளின் சகோதரனான பெருமாள் புறப்பட்டு வந்தார். மணமகனை அழைத்துச் சென்று திருமணஞ்சேரியில் வைத்து மணமகளை தாரை வார்த்துக் கொடுத்தார். எனவே இத்திருத்தலம் நித்திய கல்யாண சேத்திரம் எனப்படுகின்றது.ஆக இத்தனை ஊர்களும் ஒரே கல்யாணத்தில் தொடர்புடையனவாகும்
கதை 3
காமனை எரித்த கதை
திருமணம் செய்வதற்காக சிவபெருமானுக்கு திருமண ஆசை வரவேண்டும் என்ற நோக்கத்தில் மன்மதன் தன்னுடைய மலரம்பை சிவபெருமான் மீது தொடுத்தான். இதனால் சினம் கொண்ட சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணை திறந்து மன்மதனை எரித்து விட்டார்.
எரிந்து போன மன்மதனும் அவன் மனைவி ரதியும் இத்தலத்திற்கு வந்து இறைவனை நோக்கி தவம் இருந்தனர். அவனுடைய தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் அவனை உயிர்ப்பித்தார். இந்நிகழ்வு நடந்த தலமும் இதுவே ஆகும்.
சிறப்பு வழிபாடுகள்
அபிஷேகப் பிரியரான உத்வாகநாதருக்கு மஞ்சள், தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யலாம் சனி தோஷம் உடையவர்கள் சனீஸ்வர சன்னதிக்கு வந்து நெய் தீபம் அல்லது எள் தீபம் ஏற்ற வேண்டும்.
மங்கள் ராகுவுக்கு செய்யப்படும் பாலாபிஷேகம், பால் பொங்கல் நெய்வேத்யம் சிறப்பு வழிபாடுகள். இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு வர திருமண தடை நீங்கி, பிள்ளை வரம் பெற்று சுபிட்ஷமாக வாழலாம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |