குந்தி தேவியின் பாவத்தை நீக்கிய திருத்தலம்
மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் தாயாகவும் பாண்டுவின் மனைவியாகவும் சித்திரக்கப்படுகிறார்.
யார் இந்த குந்தி தேவி?
இவர் இளம் வயதிலேயே குந்திபோஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டார். இவர் குந்தி அரசாங்கத்தின் மகாராஜா. இதன் பின்னரே ப்ரித்தா என்ற இவரின் பெயர் குந்தி தேவி என்று மாற்றப்பட்டது.
இவர் துர்வாச முனிவருக்கு சேவை செய்வதற்காக பவரு வயதை எட்டியதும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முனிவருக்கு சேவை செய்து சில வருடங்கள் வாழ்ந்தார்.
குந்தி தேவியின் சேவையை பாராட்டும் விதமாக துர்வாச முனிவர் குழந்தை வரம் தரும் மந்திரத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
யாரை மனதில் நினைத்து நீ இந்த மந்திரத்தை கூறுகின்றாயோ; அவ்வேளையில் அவர் சாயலில் உனக்கு மகன் பிறக்கும் என கூறியுள்ளார்.
இதை விளையாட்டு விதமாக எடுத்துக்கொண்டு மந்திரம் சொன்னால் எப்படி குழந்தை பிறக்கும் என கூறி, சூரியனை பார்த்து அந்த மந்திரத்தை உச்சரித்துள்ளார்.
உச்சரித்து முடிந்தவுடனே ஆண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளது. அதன்போது தான் அந்த மந்திரத்தின் சிறப்பு குந்தி தேவிக்கு புரிந்தது.
திருமணம் ஆகுவதற்கு முன்பே இப்படி குழந்தை இருந்தால் என்ன ஆகும்? தந்தையும் சுற்றி இருப்பவர்களும் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி, கூடை ஒன்றில் குழந்தையை வைத்து ஆற்றில் கண்காணாத இடத்திற்கு அனுப்பிவிடுகிறார்.
இந்த குழந்தை தான் கர்ணன் என்ற பெயரில் சூரியனின் அவதாரத்தில் வளரப்படுகிறது.
ஒரு நாள் இது குறித்து துர்வாச முனிவரிடம் பேசிய குந்தி தேவி, பாவம் நீங்குவதற்கு பரிகாரம் தாருங்கள் என வினவியுள்ளார்.
இதை பொருட்டு, மாசி மகம் அன்று ஏழு கடல்களில் நீராடி, உன் பாவத்தை நிவர்த்தி செய்துக்கொள் என துர்வாச முனிவர் கூறியுள்ளார்.
குந்தி தேவியின் பாவத்தை நீக்கிய கோயில்
ஒரே நாளில் எப்படி ஏழு கடலில் நீராட முடியும் என்று கவலையுடன் இறைவனை துதித்துள்ளார் குந்தி தேவி.
அந்தவேளையில் கேட்ட அசரீரியில் ' திருநல்லூர் கோயிலின் பின்புறத்தில் ஓர் தீர்த்தக்கேணி இருக்கிறது. அதை ஏழு கடலாக நினைத்த நீராடு' என கேட்டுள்ளது.
சாப விமோசனம் பெறுவதற்கு குந்தி தேவி மாசி மகம் அன்று அந்த தீர்த்தக் கேணியில் நீராடியுள்ளார். அவருடைய பாவத்தையும் நீக்கிக்கொண்டுள்ளார்.
அதன் காரணமாகவே அந்த தீர்த்தக்கேணியானது "சப்த சாகர தீர்த்தம்" என்று அழைக்கப்படுகிறது.
குந்திதேவியின் பாவத்தை நீக்கிய இத்தலமானது, தஞ்சை மாவட்டத்தில் பாபநாச வட்டாரத்தில் திருநல்லூரில் அமைந்துள்ளது. இத்தலமானது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் மாசி மகம் அன்று இந்த தீர்த்தக்கேணியில் நீராடினால் ஏழு கடல்கள் நீரும் பொங்கி வழியும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |