திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோவில் தேரோட்டம்- நேரலை
திருநெல்வேலியில் 2000 ஆண்டுகள் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலுலாக நெல்லையப்பர் காந்தி மதி அம்மன் கோயில் விளங்குகிறது.
7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த சைவ திருத்தலம்.
இக்கோயிலில் பல விஷேச திருவிழாக்கள் நடந்தாலும் ஆனி திருவிழாவும், ஐப்பசி திருவிழாவும் மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதில் ஆனி மாதம் தொடங்கி ஆனி திருவிழா கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக 9ஆம் தேரோட்டம் வெகு விமர்சையா நடைபெறும். இக்கோயில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன.
இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும்.
சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்த தேர் காணப்படும்.
முக்கிய தேரோட்டமான இன்று நடைபெறும் விழா நேரலை காட்சியாக ஐபிசி பக்தியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. அதை குடும்பங்களோடு பார்த்து நெல்லையப்பர் காந்தி மதி அம்மனின் அருள் பெறுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |