ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்: எது தெரியுமா?
இந்து மத மக்கள் பிள்ளையாரை முதன்மை தெய்வமாக கொண்டாடுகிறார்கள்.
முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னே கோயிலில் உள்ள மூலவரை வழிபடுவது வழக்கம்.
அந்தவகையில், விநாயகரின் ஆலயங்களில் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் மணிமூர்த்தீஸ்வரம்.
திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
900 வருடங்கள் பழைமை வாய்ந்த, ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் திகழும் இவ்வாலயத்தின் நீளம் சுமார் 80 மீட்டர். அகலம் 40 மீட்டர்.
இந்த ஆலயத்தில், மூன்று பிராகாரங்கள், எட்டு மண்டபங்கள் என பிரமாண்டமாகப் பரந்துவிரிந்து காணப்படுகிறது.
விநாயகனின் 32 வடிவங்களில் எட்டாவது திருவடிவமான உச்சிஷ்ட கணபதி இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்.
மேலும், தன் தேவியான வல்லபையைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி இறைவன் காட்சிகொடுக்கிறார்.
தேவியோடு விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் இத்திருக்கோலத்தை தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும் என்கிறார்கள்.
இங்கு கொடி மரத்திற்கு வலது பக்கம் சொர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதியும் அதற்கு முன்பு பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பம்சமாகும்.
இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், சூத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
அதேபோல், வன்னிமரம், பனைமரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |