விரைவில் திருமணம் நடக்க இவரை தரிசித்து வாருங்கள்

By Sakthi Raj May 06, 2024 12:30 PM GMT
Report

வீரம் விவேகம் ஞானம் அழகு என மொத்த வடிவமாக காட்சி கொடுப்பவர் முருகர்.முருகனை பார்த்தால் நின்று பார்த்து கொண்டே இருக்கலாம் அவரின் பார்வைக்கும் வேலுக்கும் அழகு மயிலுக்கு தன் மனதை தொலைக்காத பக்தர்கள் இல்லை.

அப்படியாக முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு. சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடக்காமல் அவருடைய வேலுக்கு அபிஷேகம் நடைபெறும் தலம்.

விரைவில் திருமணம் நடக்க இவரை தரிசித்து வாருங்கள் | Tiruparagundram Murugan Meentachi Amman Perumal

சத்தியகிரிஸ்வரர் (சிவன்) பவளக்கனிவாய் பெருமாள்,கற்பக விநாயகர்,சுப்ரமணியர்,துர்க்கை அம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தில் ஒரே குடைவரையில் அருளும் கோவில் என பல சிறப்புகளை கொண்டது தான் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோயில்.

மற்ற ஐந்து தலங்களிலும் நின்ற கோலத்தில் அருளும் முருக பெருமான் இங்கு தெய்வானையை மணமுடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார்.

அருகில் நாரதர் இந்திரர் பிரம்மா ,நின்ற கோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், இவருக்கும் மேலே சூரியன் சந்திரன், கந்தர்வர்களும் உள்ளனர்.மேலும் இங்கு மிக பெரிய சிறப்பு என்ன வென்றால் இங்கு வீற்றிருக்கும் பவளக்கனிவாய் பெருமாள் தான் மீனாட்சி அம்மனுக்கு திருமணம் நடத்தி வைக்கிறார்.

விரைவில் திருமணம் நடக்க இவரை தரிசித்து வாருங்கள் | Tiruparagundram Murugan Meentachi Amman Perumal

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் மதுரையில் கோலாகலமாக திருவிழா போல் நடைபெறும் .

அப்படியாக முதல் நாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து பெருமாள் சென்று மறு நாள் காலை தன் தங்கைக்கு திருமணம் நடத்தி வைக்க தன் அப்பா அம்மா திருமணம் காண உடன் சுப்பிரமணிஸ்வாமியும் தெய்வானையும் செல்கின்றார்கள் .இதை கேட்கவே எத்தனை அழகாக இருக்கிறது.

கல்வியா?செல்வமா?வீரமா?

கல்வியா?செல்வமா?வீரமா?


இந்த கோயில்களின் சிறப்பையும் முருகனின் சிறப்பையும் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.அப்படி இருக்க இங்கு சிவபெருமானே மலை வடிவமாக அருள்வதாலும் கோவில் குடைவரையாக இருப்பதாலும் சுவாமிக்கு சுற்றி பிரகாரம் இல்லை.

நீண்ட நாள் திருமணம் தள்ளி போதல் குழந்தை இல்லாமல் பல நாள் தவிப்பவர்கள் திருப்பரங்குன்றம் அப்பன் முருகன் தெய்வானையை தரிசிக்க எல்லாம் கை கூடி வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US