உலகின் பணக்கார கடவுள்: 1031 கிலோ தங்க காணிக்கை
உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்க காணிக்கையாக மட்டும் 1031 கிலோவை வழங்கியுள்ளதாக திருப்பதி தேவஸ்தான் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதை மிக முக்கியமானதாக பார்க்கின்றனர்.
ஒருநாளில் மட்டும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானம் வருகின்றது, இதுதவிர வைர தங்க வெள்ளி நகைகளும் காணிக்கையாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் 1031 கிலோ தங்க காணிக்கை வழங்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதன் மதிப்பு மட்டும் 773 கோடி ரூபாய் ஆகும், கடந்த யூன் மாதம் மட்டும் 225 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாம்.
தற்போதைய நிலவரப்படி 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.