இனி திருப்பதி போனால் இதை மறக்காமல் செய்யுங்கள்
நீங்க எந்த ராசிக்காரர்கள் ஆக இருந்தாலும் சரி, எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் சரி, திருப்பதிக்கு செல்லும் போது இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்து விட்டால் போதும்.
உங்களுடைய வாழ்க்கையில் நல்லது நடக்க தொடங்கிவிடும். திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும் என்று சொல்லுவார்கள் அல்லவா.
அதை நீங்கள் கண்கூடாக காண வேண்டும் என்றால், இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தவறாமல் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெருமாளை வேண்டி பதிவிற்குள் பயணம் செய்வோம
திருப்பதிக்கு சென்றால் திருப்பம் ஏற்பட பரிகாரம் வீட்டில் இருந்து திருப்பதிசெல்ல கிளம்புகிறீர்கள். ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு வைத்து மடித்து எடுத்து கொள்ளுங்கள். கல் உப்பை கொஞ்சம் தாராளமாகவே எடுத்துக் கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது.
இதை பொட்டலத்தை உங்களுடைய பாக்கெட்டிலும் வைத்துக் கொள்ளலாம், அல்லது ஹேண்ட் பேக்கிலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்யும் போது இந்த கல்லுப்பு உங்களோடு இருக்க வேண்டும்.
அப்படி பார்த்துக் கொள்ளுங்கள். திருப்பதி பெருமாளை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது, இந்த கல்லுப்பை பத்திரமாக உங்களோடவே எடுத்து வரணும்.
வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கல்லுப்பு ஜாடி இருக்கும் இல்லையா. சமையல் அறையில் இருக்கும் கல் உப்பு ஜாடையில், இந்த கல்லுப்பை கொட்டி கலந்து விடுங்கள்.
உங்கள் கையோடு திருப்பதிக்கு எடுத்துச் சென்ற கல் உப்பை, சமையலறையில் இருக்கும் கல் உப்பு ஜாடியில் கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் பரிகாரம். இந்த கல்லுப்பு தீருவதற்கு முன்பாகவே மீண்டும் மீண்டும் கல்லுப்பை வாங்கி அந்த ஜாடியில் கலந்து கொண்டே இருப்பீர்கள்.
அப்போது பெருமாள் கோவிலுக்கு எடுத்து சென்று வந்த கல் உப்பும், அந்த கல்லுப்போடு நிச்சயம் கலந்து இருக்கத்தான் செய்யும். தினமும் இந்த உப்பை போட்டு சமைத்து சாப்பிட்டால் உங்கள் கஷ்டம் தீரும்.
திருப்பதி பெருமாள் இருக்கும் இடம் சந்திர பகவானுக்கு சொந்தமானது. அந்த சந்திர பகவானின் சக்தி நீங்கள் எடுத்துச் சென்ற கல்லுப்போடு கலந்து இருக்கும்.
அதை கொண்டு வந்து வீட்டில் வைக்கும் போது நிச்சயம் கஷ்டங்கள் தீரும் என்பதுதான் இந்த பரிகாரத்தினுடைய நம்பிக்கை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள்.
நிச்சயமாக உங்கள் கஷ்டங்கள் எல்லாம் அப்படியே ஒரு நொடி பொழுதில் விலகிப் போகும் அதிசயத்தை உணருவீர்கள். கோவிலுக்கு உள்ளே உப்பை கொண்டு சென்றால் செக்கிங், தூக்கி குப்பையில் போட்டுடுவாங்க. அப்படியெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. திறமையாக உப்பை கொண்டு செல்லவும்.
திறமையாக அந்த உப்பை மீண்டும் வீட்டுக்கு எடுத்து வரவும். வாழ்க்கையில் ஜெயிக்கவும். எவ்வளவு விஷயங்களை பண்றீங்க. சாதாரண இந்த ஒரு விஷயம் செய்ய மாட்டீங்களா.
பெருமாளை முழுசாக நம்பியவர்களை அவர் எப்போதுமே கைவிட்டதில்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |