கிரிவலம்: திருவண்ணாமலையில் திரண்ட பக்தர்கள்
திருவண்ணாமலையில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் திரண்ட கூட்டம்
சித்திரை மாத பௌர்ணமியன்று லட்சக்கணக்கிலான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
அதன்படி, திங்கட் கிழமையில் இருந்து பக்தர்கள் வருகை ஆரம்பமாகியது. மறுநாள் காலையில் அதிகாலை 2 மணியில் இருந்து காலை 9 மணி வரை நிகழ்ந்த கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஆனாலும் மாலை 3 மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுவை போன்ற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்ச பக்தர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டரை மணி நேரமாக வாகனங்கள் அசையவே முடியாமல் இருந்துள்ளது.
திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 9 வீதிகளும் 11 பேருந்து தரிப்பிடம் இருந்த போதிலும் பக்தர்களின் எண்ணிக்கையால் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது போன்று காட்சியளித்துள்ளது.
மேலும் கடும் வெயிலின் மத்தியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதியுற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |