திருவண்ணாமலை தீபத்தன்று வீடுகளில் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கிய வழிபாட்டு முறைகள்
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று மலை உச்சியில் ஏற்றக்கூடிய மகா தீபம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் ஆன்மீக சிறப்புகளை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார் அவர்கள். அதை பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலை என்பது காலத்தால் அளவிட முடியாத சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதம் பாவங்களை போகக்கூடிய மாதம் என்றும் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. பக்தர்கள் இந்த கார்த்திகை தீபத் திருநாள் அன்று வீடுகளில் கட்டாயம் தீபம் ஏற்ற வேண்டும்.

முடிந்த அளவிற்கு மெழுகுவர்த்திகள் மின்சார விளக்குகள் அல்லது தண்ணீரில் தீபம் ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது. மண் அகல் விளக்குகளில் பருத்தித் திரி மற்றும் நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும்.
அப்படியாக, தீபம் ஏற்றம் முன்பாக முதலில் குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு சிவபெருமானுடைய ஐந்து முகங்களை குறிக்கக் கூடிய வகையில் ஐந்து விளக்குகளையும், முருகப்பெருமானை குறிக்கக்கூடிய வகையில் ஆறு விளக்குகள் மற்றும் மகாவிஷ்ணு ஆகியோரை வழிபாடு செய்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும், திருவண்ணாமலை மகா தீபத்தை பற்றி பல்வேறு முக்கியமான விஷயங்களை இது காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.