அங்கம் வெட்டுதல் திருவிளையாடல் புராணம்-27
போட்டி பொறாமைகள் இதனால் தான் பல பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் சந்திக்கிறோம் துன்புறுகின்றோம்.அப்படியாக தீய எண்ணங்கள் கூடாது என்று உணர்த்தும் வகையில் அங்கம் வெட்டுதல் திருவிளையாடல் புராணம்அமைந்திருக்கிறது.
27 ஆம் புராணமாக மதுரையில் ஈசனால் நிகழ்த்த பட்டு இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம். மதுரை மாநகரில் ஆயுதங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து வந்தார்.
அவரும் அவரின் மனைவியும் மிகுந்த சிவ பக்தர்கள் ,பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு ஆசிரியர் சதா சிவா சிவா என்று ஐயனே நினைத்து வழிபாடு செய்து கொண்டு இருப்பவர்.
அப்படியாக அவரிடம் படித்து கற்று தேர்ந்த மாணவர்களில் ஒருவரை தவிர அனைவரும் குருவின் மீது மிகுந்த பக்தி அன்பு கொண்டு இருப்பவர்கள்.
அந்த தீய எண்ணம் கொண்ட மாணவன் பெயர் சித்தன்.அவன் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய ஆசிரியரே எதிரியாக போட்டியாக பார்க்க தொடங்குவிட்டான்.ஒரு சமயம் தன்னுடைய ஆசிரியருக்கு எதிராக சித்தன் பயிற்சி பள்ளி ஒன்று தொடங்கி,தன் ஆசிரியரிடம் பயிற்சி எடுக்கும் மாணவர்களை ஆசை வார்த்தை காட்டி தன் பள்ளிக்கு அழைத்து கொண்டான் சித்தன்.
நடப்பவை எல்லாம் தெரிந்து ஆசிரியர் எதையும் பொருட்படுத்தவில்லை.சித்தன் ஆசிரியரோடு நிறுத்த வில்லை.ஆசிரியரின் மனைவியிடமே சென்று தன்னுடைய அத்துமீறல்கள் செய்தான் சித்தன்.அம்மையார் தன் கணவரிடம் சொன்னால் மனம் நொந்து போவார் என்று உணர்ந்து சொல்லாமல் இருந்தார்.ஆனால் சித்தன் செய்த வம்புகள் அனைத்தையும் மனம் நொந்து அப்பன் ஈசனிடம் முறையிட்டார் ஆசிரியரின் மனைவி.
காலம் கடந்தது சித்தனுடைய அத்துமீறல்கள் அதிகமானது ஈசன் பார்த்து சும்மா இருப்பாரா?தன்னுடைய பக்தர்கள் கண்ணில் ஆனந்த் கண்ணீர் தவிர நொந்து சிந்தும் கண்ணீரை காண பொறுக்காத ஈசன் சித்தனுக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தார்.
ஆதலால் ஈசன் ஆசிரியர் போன்று உருமாறி சித்தனிடம் சென்று சித்தா எனக்கு வயது ஆகிவிட்டது.நீ வாலிபன் இருந்தாலும்.நாம் இருவருக்கு இடையில் ஒரு சவால் வைத்து கொள்ளலாமா என்று கேட்க.
சித்தன் வந்தது சிவ பெருமான் என்று அறியாமல்,எப்பொழுது வாய்ப்பு கிடைக்க தன்னுடைய ஆசிரியரை வீழ்த்தலாம் என்று காத்துகொண்டு இருந்த சித்தன் பெரும் கோபம் கொண்டு இது தான் சமயம் என்று சவாலுக்கு ஒப்புக்கொண்டான்.
எம்பெருமான் நினைத்து இருந்தால் சித்தனை சண்டையிட்ட நொடி பொழுதில் வீழ்த்தி இருக்கலாம்.ஆனால் ஈசன் அப்படி செய்யவில்லை.
லோக பாவனையாக வெகு நேரம் இடசாரி வலசாரி சண்டையிட்டு கொண்டு இருந்தார் ஈசன்.பின்பு மிகுந்த கோபம் கொண்ட ஈசன் தீயவை பேசிய சித்தனின் நாக்கை துண்டித்தார்.ஆயுத்தங்கள் கற்று தெரிந்த சித்தனின் செருக்கு நிறைந்த இரு கரங்களையும் அறுத்தார்.இதை பார்த்து கொண்டு இருந்த மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி சித்தனின் போக்கு பிடிக்காமல் பலரும் இருந்தனர்.
மக்கள் சந்தோஷத்தில் திளைத்து போகும் முன் ஆசிரியராக வந்த ஈசன் மறைந்து விட்டார்.பின்பு ஆசிரியரை தேடி மக்கள் நேராக ஆசிரியரின் மனைவியிடம் சென்று கேட்க அம்மையாரோ கோயிலுக்கு சென்ற ஆசிரியர் இன்னும் வரவில்லையே என்று சொன்னார்கள்.
பின்பு மக்கள் சித்தனின் சிரத்தை ஆசிரியர் வெட்டிய கதையை அம்மையாரிடம் சொல்ல அம்மையார் திகைத்து போனார்.இதை கேட்டு கொண்டு இருக்கையில் ஆசிரியரும் வந்து விட்டார்.பிறகு ஆசிரியரிடம் நடந்த விவரத்தை சொல்ல.
தன் உருவம் பொருத்தி வந்தது எம்பெருமான் என்று உணர்ந்து கோயிலில் இருந்த வந்த ஆசிரியர் மீண்டும் கோயிலுக்கு சென்று ஈசன் திரு வாடையை பற்றி கொண்டு ஈசனே எனக்காக நீர் என் குடும்ப பாரத்தை ஏற்று கொண்டீரா?எனக்காக போர் செய்து தாங்கள் மீது காயம் பட்டு விட்டதா.ஈசனே மனம் பொறுக்கவில்லையே என்று ஈசனின் திருவடிகளை பற்றி கொண்டு அழுதார் ஆசிரியர் புலம்பினார்.
இது ஒரு புறம் இருக்க,இங்கு நடந்த விஷயம் எல்லாம் அரசன் காதுகளுக்கு எட்டிவிட்டது உடனே குலோத்துங்கன் ஆசிரியரை யானை மேல் ஏற்றி வர செய்து ஆடை ஆபரணங்கள் ரத்தினங்கள் கொடுத்து கௌரவித்தார்.
இந்த 27 ஆம் திருவிளையாடல் புராணம் தினமும் படிப்பவர்களுக்கு எதிர்கள் தொல்லையே இருக்காது.படிப்பிலும் விளையாட்டிலும் மேன்மை அடைவார்கள்.
அப்பன் ஈசனை நம்பிவர்கள் கண்ணில் அவனை நினைத்து சிந்தும் ஆனந்த கண்ணீர் தவிர மனம் நோக விடமாட்டார் என்பதற்கு ஒவ்வொரு திருவிளையாடலும் அமைந்து இருக்கிறது.
ஓம் நமச்சிவாய
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |