நெருப்பு நமக்கு உணர்த்தும் ஆன்மிகம் என்ன?

By Sakthi Raj Jun 24, 2024 12:29 PM GMT
Report

ஆன்மிகம் என்றால் உணர்தலே.நமக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் அவன் தான் இறைவன்.அவன் தான் நமது ஆட்டத்திற்கு தலைவன் என்று கற்று புரிதலே பரிபூர்ண ஆன்மிகம் ஆகும்.

அந்த கற்றல் தொடங்குவது இயற்கையிடம் இருந்தே.அதிலும் நெருப்பு ஒன்று இருக்கிறது அல்லாவா அவை உணர்த்தும் ஆன்மிக தெளிவில்தான் இறைவன் குடி கொண்டு இருக்கின்றான்.

பிறந்து விட்டோம் அதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வாழத்தெரியதாவன் வகுத்து கொண்ட பிரிவுகள் தவிர்த்து அவன் அனுப்பிய நம்மில் விதியும் கர்மவினைகளை மட்டுமே அடங்கும்.

நெருப்பு நமக்கு உணர்த்தும் ஆன்மிகம் என்ன? | Nerupu Unarthum Aanmeegam Eena Thagavl Vazhipadu

அந்த விதியில் தான் வாழ்க்கை புரியாமல் ஆட்டம் போடும் நபர்களுடன் நாம் சிக்கி தவித்து அவன் அருளை பெறுவது ஆகும்.உண்மையில் அவனை புரிய சில புரியாத நபர்களுடன் போட்டி போடவேண்டியுள்ளது.

சரி இப்பொழுது நம்மை உணர்த்தும் நெருப்பை பற்றி பார்ப்போம்.

எத்தனை அழகானது இந்த நெருப்பு.இறுதியில் நாம் நண்பன் இவன் தன்.நம் இறுதி நொடியில் உடன் வருவது யார் என்று கேட்டால் இந்த நெருப்பு தான்.அவை தான் நம் விதியை விழுங்கி நமக்கு மோட்சம் கொடுக்கும் தெய்வம்.

முடிவில் தான் ஒரு மனிதன் தொடக்கம் இருக்கிறது.அதாவது வாழ்நாளில் ஒருவன் கற்று தெளிய வேண்டியது என்னவென்றால் அவன் தன்னுடைய இறப்பிற்கு மனப்பூர்வமாக தயார் ஆவதே.அந்த இறப்பிற்கு பயம் இல்லாமல் அவன் வாழ பழகிவிட்டேன் என்றால் அவனை யாரும் நெருங்க இயலாது.

அவன் பணம் பொருள் எல்லாம் மாய உலகில் வாழ சம்பாதித்து கொள்ளவேண்டும் என்றாலும் முடிவான உண்மையான ஒன்றுக்கு தயார் செய்து கொள்ள சில பாடம் படிக்க வேண்டும்.அந்த படிப்பு தான் ஆன்மிகம்.

நெருப்பு நமக்கு உணர்த்தும் ஆன்மிகம் என்ன? | Nerupu Unarthum Aanmeegam Eena Thagavl Vazhipadu

அதாவது ஒருவன் இறப்பது அவன் அறியவேண்டும்.எந்த நொடியிலும் தனக்கு மரணம் வரலாம் ஆதலால் நாம் எப்பொழுதும் சதா சிவனை நினைத்து தெரிந்து தெரியாமல் செய்த  பாவத்திற்கு மனதார மன்னிப்பு கேட்டு எந்த தயக்கமும் எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் தைரியமாக அவன் இருக்கிறான் செய்ய வேண்டிய கடமை செய்வோம் பின் அவன் பார்த்து கொள்வான் என்று இருக்க வேண்டும்.

ஒருவனுக்கு நல்ல மரணம் என்பது அவனுக்கு தெரிந்தே வருவது.அதற்கு அவன் எந்த பயமும் இல்லாமல் அவனை கொடுப்பது ஆகும்.

அஷ்டம சனி காலங்களில் நாம் வணக்க வேண்டிய சனி பகவான் எங்கு இருக்கிறார் தெரியுமா?

அஷ்டம சனி காலங்களில் நாம் வணக்க வேண்டிய சனி பகவான் எங்கு இருக்கிறார் தெரியுமா?


வாழ்தல் ஒரு நாள் இறப்பதற்கே.அது புரிந்தால் போதும் ஆணவம் இல்லாமல் தெய்வதன்மை நம்மில் வரும்.ஆக நெருப்பை போல் வாழ வேண்டும்.பாரபட்சம் இன்றி வந்தவரை மோட்சம் அடைய செய்யும் அந்த நெருப்பை வணக்க வேண்டும்.போற்றுதல் வேண்டும்.

'நாம்'என்ற அகங்காரத்தை நாம் அழிக்க வில்லை என்றால்'நாம்'என்பதை தடம் இல்லாமல் நெருப்பு இறுதியில் அழித்து விடும்.ஆக நம்மை புதுப்பிக்கும் நெருப்பை வணங்குவோம்.அதில் இருந்து வாழ்க்கை புரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US