நாளைய ராசி பலன் (18-04-2026)
மேஷம்:
இன்று வாழ்க்கை துணையுடன் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். வேலையில் உயர் அதிகாரிகளிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
மனதில் உள்ள ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். உடன் இருப்பவர்களிடம் வீண் மனக்கசப்பு வரலாம். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுனம்:
சொந்தங்கள் மத்தியில் சில சங்கடமான மன நிலை வரலாம். பொருளாதார விஷயத்தில் உடன் பிறந்தவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும்.
கடகம்:
வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். கடன் பிரச்சனை விலகும். பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நன்மையான நாள்.
சிம்மம்:
சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை செய்யுங்கள். வேலை பளு அதிகரிக்கும். தாய் உடல் நிலையில் கவனம் வேண்டும்.
கன்னி:
அரசியலில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
முகம் தெரியாத நபரிடம் உங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சோர்வு உண்டாகலாம். எதிரிகள் விலகி செல்வார்கள்.
விருச்சிகம்:
திருமண தொடர்பான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவை பெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சங்கடம் விலகும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
தனுசு:
பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கையை பற்றி பெரியவர்களுடன் ஆலோசனை செய்வார்கள். பொருளாதாரத்தில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகும். ஒரு சிலர் வேலைக்காக திடீர் பயணம் மேற்கொள்ளலாம்.
மகரம்:
புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்:
குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். தங்கம் வெள்ளி போன்ற பொருள் வாங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.
மீனம்:
இன்று அலுவலகத்தில் உங்களுக்கு உரிய பாராட்டுகளும் மதிப்பும் உயரும். வழக்கு விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |