2026: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்.. இந்த ராசிகளுக்கு விதியே மாறப்போகிறதாம்

By Sakthi Raj Apr 17, 2026 07:29 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிர பகவான் தான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி, அன்பு, வசதி வாய்ப்புகள் போன்றவற்றை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 10. 19 மணிக்கு சுக்கிர பகவான் பரணி நட்சத்திரத்தை விட்டு கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி அன்று சுக்கிரபகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுவார். இதனால் மாளவ்ய ராஜ யோகத்தை உருவாக்குவார். மேலும், சூரிய பகவானால் ஆளக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் இருப்பது  சுக்ராதித்ய ராஜ யோகத்தை உருவாக்குகிறது.

இந்த மாற்றம் ஏப்ரல் 27ஆம் தேதி வரை நீட்டிக்கவுள்ளது. இதனால் சில ராசிகள் மிகப்பெரிய அளவில் வாழ்கையில் நேர்மறையான மாற்றங்களை பெற காத்திருக்கிறார்கள். அவர்கள் இருந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்.. இந்த ராசிகளுக்கு விதியே மாறப்போகிறதாம் | 2026 April 16 Sukiran Natchira Peyarchi Palangal

2026: சித்ரா பௌர்ணமி எப்பொழுது: அந்த நாளிற்கு ஏன் இவ்வளவு சிறப்புகள் ?

2026: சித்ரா பௌர்ணமி எப்பொழுது: அந்த நாளிற்கு ஏன் இவ்வளவு சிறப்புகள் ?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரபகவானுடைய இந்த நட்சத்திர மாற்றமானது இவர்களுக்கு ஆளுமையை வெளிப்படுத்த போகிறது. இவர்களுடைய வார்த்தைகளால் இவர்கள் சுற்றியுள்ளவர்களை கவர போகிறார்கள்.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருக்கக்கூடிய வேலை நல்ல முடிவை தரும். குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பொற்காலமாக அமைகிறது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப்போடுகிறது. வேலை செய்யும் இடங்களில் சம்பள உயர்வு கேட்கக்கூடிய அற்புதமான காலகட்டம்.

அது மட்டுமல்லாமல் சம்பள உயர்வுடன் சேர்த்து பதவி உயர்வையும் சிலர் பெறுவார்கள். வீடுகளில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகத்தை பெறுவீர்கள்.

2026: சித்திரை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்

2026: சித்திரை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றுமானது இவர்களுக்கு படைப்பாற்றலை அதிகரிக்க போகிறது. புதிய யோசனைகளால் வியாபாரத்தை வளர்ச்சி அடைய செய்வீர்கள்.

தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் உங்கள் தொழிலை அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லக்கூடிய அமைப்பு உண்டாகும். நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகள் எதிர்பாராத விதமாக நல்ல முடிவை பெற்றுக் கொடுக்கும். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US