நாளைய ராசி பலன் (19-04-2026)
மேஷம்:
இன்று உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. புதிய பொருட்களை வாங்கி மகிழ்கிவீர்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்:
இன்று உங்கள் சிந்தனைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இன்று எதிர்காலம் தொடர்பான பயம் விலகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதலும் மனதில் உள்ள கவலையும் விலகும்.
மிதுனம்:
வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். விலை உயர்ந்த பொருட்கள் மீது அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்கால பயம் விலகும்.
கடகம்:
உடன் பிறந்தவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து செல்வது அவசியமாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
சிம்மம்:
வியாபாரத்தில் முதலீடு செய்யும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். மாணவர்கள் கல்விகள் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். புதிய வண்டி வாகனம் மாற்றக்கூடிய யோசனை உருவாகும்.
கன்னி:
அரசு வேலைகள் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டிய நாள்.
துலாம்:
இன்று குழந்தைகள் மிகவும் பிடிவாதமாக செயல்படக்கூடிய நாள். உணர்ச்சிவசப்படாமல் எதிலும் பொறுமையாக கையாள்வது அவசியம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
விருச்சிகம்:
நண்பர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வீர்கள். சாதூர்யமான பேச்சுகளால் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். தவறவிட்ட வாய்ப்புகளை மீண்டும் பயன்படுத்தி முன்னேற்றம் அடையும் நாள்.
தனுசு:
போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். பூர்வீக சொத்துக்களை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மகரம்:
குழந்தைகளின் செயல்பாடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள்.
கும்பம்:
இன்று பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். வீடு தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும்.
மீனம்:
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்ப்புகளை கடந்து வெற்றி பெறக்கூடிய நாள். கடன் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். உடல் சோர்வு மனசோர்வு விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |