இன்றைய ராசி பலன் (19-05-2026)
மேஷம்:
பணம் முதலீடு செய்யும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு வண்டி வாகனங்கள் பழுதாகலாம். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களால் சில லாபம் உண்டாகலாம்.
ரிஷபம்:
உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகி செல்வார்கள். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வேலை ரீதியாக திடீர் வெளியூர் செல்லும் நிலை வரலாம்.
மிதுனம்:
மனதில் சில குழப்பங்களும் எதிர்கால பயமும் வந்து செல்லும். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண பிரச்சனை விலகும்.
கடகம்:
உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். முடிந்தவரை பணம் தொடர்பனா விஷயங்களில் கவனமாக இருங்கள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். நன்மையான நாள்.
சிம்மம்:
இன்று அரசியல் வட்டாரம் விரிவடையும். உங்களுக்கு நெருக்கமானவர்களை புரிந்து கொள்வீர்கள். தேவை இல்லாமல் உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
கன்னி:
எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள். விலகி சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள்.
துலாம்:
உடல் சோர்வு மற்றும் மனசோர்வு உண்டாகலாம். சிலருக்கு வாழ்க்கையின் மீது சில வெறுப்பு நிலை உண்டாகலாம். நண்பர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியான நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் சில மனக்கசப்புகள் வந்து செல்லும். சிலருக்கு உயர் கல்விக்கான பேச்சு வார்த்தை தடையின்றி முடியும். குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு:
ஒரு சிலருக்கு எதிர்பாராத வீண் வம்பு வழக்குகள் வந்து சேரலாம். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து பிரச்சனை விலகும். அலைய வழிபாடுகளில் சிலருக்கு ஆர்வம் உண்டாகும்.
மகரம்:
இன்று புதிய நட்புகளின் அறிமுகத்தால் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி பிறக்கும். வேலையில் உள்ள சிக்கல் விலகி முன்னேற்றம் கிடைக்கும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பமும் பயமும் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டார விரிவடையும். கலை துறையில் உள்ளவர்கள் சாதிக்கும் நாள்.
மீனம்:
சிலருக்கு பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் வரும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |