நாளைய ராசி பலன் (21-05-2026)
மேஷம்:
மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் வரலாம். திருமண உறவில் சந்தித்த சிக்கலை விலகும். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பொருளாதார நெருக்கடிகள் விலகி நன்மை உண்டாகும்.
ரிஷபம்:
உடல் சோர்வு உண்டாகும். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பேசும் பொழுது எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு செய்வது அவசியம்.
மிதுனம்:
தேவை இல்லாத மன கசப்புகள் வரலாம். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டாகலாம். காதல் வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும்.
கடகம்:
உங்கள் வீடுகளில் தேவை இல்லாத குழப்பங்கள் வந்து செல்லும். தேவை இல்லாத செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். சிலர் குடும்பத்துடன் பொழுது போக்கு விஷயங்களில் கலந்து கொள்வார்கள்.
சிம்மம்:
அரசியல் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தேவை இல்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும்.
கன்னி:
வேலை பளு அதிகரிக்கும். குழந்தைகள் உடல் நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உயரும். தொழிலில் நினைத்தபடி யோகம் கிடைக்கும்.
துலாம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்வர்கள் ஒரு சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தியானம் செய்வது நன்மை தரும்.
விருச்சிகம்:
இன்று ஒரு சிலருக்கு வழக்கு விஷயமாக சில மன கஷ்டப்புகள் வரலாம். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு:
குடும்பத்தில் உள்ளவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு விரும்பியவர்கள் பரிசுப் பொருட்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
மகரம்:
எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது அவசியமாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் வருமானமும் கிடைக்கும்.
கும்பம்:
வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளாதீர்கள். குழந்தைகளுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம். படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
மீனம்:
இன்று உங்களை சுற்றி உள்ள நபர்கள் யார் எப்படி என்று நன்றாக புரிந்து கொள்வீர்கள். திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |