நாளைய ராசி பலன் (31-05-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு தேவை இல்லாத வாக்கு வாதங்களில் உண்டாகலாம். எதிர்பாராத நபர்களின் சந்திப்பு கிடைக்கலாம். வேலையில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்:
தொழில் வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்வீர்கள். சிலருக்கு திடீர் என்று பொருளாதார நெருக்கடிகள் வரலாம். கடன் தொல்லை விலகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்:
மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும் நாள்.
கடகம்:
உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். திடீர் வெளியூர் பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவை கொடுப்பீர்கள்.
சிம்மம்:
வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சகோதர்களால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும் நாள்.
கன்னி:
தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு நினைத்த காரியம் கைக்குடி வரும்.
துலாம்:
வேலை பளுவால் உடல் சோர்வு மனசோர்வு உண்டாகும். உறவினர்கள் வழியே இருந்து வந்த கசப்புகள் விலகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
விருச்சிகம்:
உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். பொழுது போக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.
தனுசு:
உடன் பிறந்தவர்கள் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது அவசியமாகும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
மகரம்:
கடின உழைப்புகளால் முன்னேறி செல்லக் கூடிய நாள். தாய்மாமன் வழி உறவுகளால் ஏற்பட்ட மன கசப்புகள் நீங்கும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மாலை மேல் நற்செய்தி வந்து சேரும்.
கும்பம்:
இன்று ஒரு சிலருக்கு மனச்சோர்வு உண்டாகலாம். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பொருளாதார விஷயங்களில் சிக்கனம் கடைப்பிடிப்பது அவசியம். சிந்தித்து செயல்படுவீர்கள்.
மீனம்:
இன்று ஆரோக்கிய ரீதியாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் வரலாம். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |