நாளைய ராசிபலன்(06-06-2026)
மேஷம்:
நீங்கள் தொழிலுக்காக முக்கியமான நபரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். பண நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள்.
ரிஷபம்:
வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று நீங்கள் திருமணம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கக் கூடிய நாள். உடன் பிறந்தவர்களின் வாழ்க்கையில் தேவை இல்லாமல் தலையிடாதீர்கள். நற்செய்தி வந்து சேரும்.
கடகம்:
கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் ஆடம்பர பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொள்வார்கள். குழந்தைகளின் படிப்பிற்காக சில முக்கிய சிலவு செய்வீர்கள்.
சிம்மம்:
வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். தாயிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள். உடன்பிபிறந்தவர்களால் சில சங்கடம் உண்டாகலாம்.
கன்னி:
இன்று நீங்கள் எதிர்பார்த்த சில முக்கியமான வேலை நினைத்தது போல் நடக்கும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
துலாம்:
வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
இன்று உங்களிடம் வாக்குவாதம் செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பை பெறுவீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
தனுசு:
வேலை பளு அதிகரிக்கும். தாய் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்தினர்கள் வருகையால் நன்மை உண்டாகும்.
மகரம்:
விவசாயம் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமையப்போகிறது. கடின உழைப்பால் மிகப்பெரிய உயரத்தை அடைவீர்கள். நன்மையான நாள்.
கும்பம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சிறந்த படிப்பார்கள், தேவையில்லாத செலவுகளை குறைக்க வேண்டும்.
மீனம்:
இன்று மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். குழந்தைகள் உங்களுக்காக சில முக்கியமான விஷயங்களை செய்து கொடுப்பார்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |