இன்றைய ராசி பலன்(21-08-2025)
மேஷம்:
இன்று சில வீடுகளில் உண்டான மன கசப்புகள் விலகி நன்மை உண்டாகும். உடன் பிறந்த சகோதர்களால் சில நன்மைகள் உருவாகும். வேலைப்பளு அதிகரிக்கும்.
ரிஷபம்:
குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள் விலக முன்னோர்கள் வழிபாடு செய்யலாம். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். அக்கம் பக்கத்தினரிடம் சற்று நிதானமாக பழகுவது அவசியம்.
மிதுனம்:
குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். மனைவி உறவால் உங்களுக்கு நன்மைகள் உருவாகும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு நன்மை நடக்கும்.
கடகம்:
மனதில் ஏற்பட்ட குழப்பங்களும் சந்தேகங்களும் விலகும். சிலர் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருப்பார்கள்.
சிம்மம்:
வியாபாரத்தில் சந்தித்த நஷ்டம் விலகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண விஷயங்களில் கவனம் அவசியம். வழக்கு விஷயங்களை முறையாக பின்பற்றுவது நன்மை தரும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இறை வழிபாட்டால் மனம் மேன்மை அடையும். மகிழ்ச்சியான நாள்.
துலாம்:
இன்று பிரிந்து சென்ற உறவுகள் உங்களை மீண்டும் வந்து சேர்வார்கள். வழக்கு விஷயம் உங்களுக்கு சாதகமாக அமையும். பெற்றோர்கள் உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
தேவையில்லாத செலவுகளால் மன வருத்தம் உண்டாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனையை சந்திப்பீர்கள். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
மகரம்:
இன்று உங்களுக்கு தேவை இல்லாத மன சங்கடங்கள் உண்டாகும். வீடுகளில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உங்களுக்கு மன கசப்புகள் உண்டாகும்.
கும்பம்:
தொழில் செய்பவர்கள் வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வங்கி சேமிப்புகளை சரியாக கவனித்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
மீனம்:
இன்று உங்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு சாதகமாக அமையும். வீடு கட்டுபவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







