இன்றைய ராசி பலன்(24-07-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் நல்ல முறையில் முடியும். சகோதரன் சகோதிரி வழி உறவில் நல்ல பிணைப்பு உண்டாகும். நன்மையான நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் சரி ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். விலகி சென்ற சொந்தம் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள்.

மிதுனம்:

இன்று மனதில் நிறைய குழப்பங்களும் மன உளைச்சலும் உண்டாகும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். ஒரு சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். உடல் நிலையில் உண்டான சோர்வு விலகும்.

கடகம்:

இன்று குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

சிம்மம்:

குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வியாபாரத்தில் சந்தித்த நஷ்டம் விலகும். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. வருமானத்தில் சந்தித்த தடைகள் யாவும் விலகும். உங்கள் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று மகிழ்வார்கள்.

ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பவர்கள் பின்பற்றவேண்டிய 15 விஷயங்கள்

ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பவர்கள் பின்பற்றவேண்டிய 15 விஷயங்கள்

துலாம்:

உங்கள் வீடுகளில் உங்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பார்கள். உடல் நிலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். நீங்க நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.

விருச்சிகம்:

சந்திராஷ்டமம் என்பதால் நெருக்கடி அதிகரிக்கும். பிரச்னை தேடிவரும். உறவுகளுடன் மோதல் உண்டாகும். யோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சி வேண்டாம். 

தனுசு:

இன்று உங்கள் பிள்ளைகள் பற்றி பெருமை அடைவீர்கள். வெளியூர் பயணம் நீங்கள் எதிர்பார்த்தது போல் அமையும். ஓர் சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்:

நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிரி விலகிச் செல்வர். வருவாய் உயரும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள்.

கும்பம்:

எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மை உண்டாகும். வேலையில் சந்தித்த தடைகள் யாவும் விலகும். நீங்கள் சாதிக்கும் நாள்.

மீனம்:

இன்று உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் ஏற்பட்ட விரிசல் விலகும். பிள்ளைகள் பற்றி புரிந்துக் கொள்வீர்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US