நாளைய ராசி பலன் (13-04-2026)
மேஷம்:
இன்று வாழ்க்கை தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் பிறரிடம் கேட்டு முடிவு செய்யாதீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நாள்.
ரிஷபம்:
மனதில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்களை செய்துக் கொள்வீர்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக செலவிடும் நாள்.
மிதுனம்:
அலுவலகத்தில் உங்களை பற்றி தேவை இல்லாத விமர்சனங்களை சில வைப்பார்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபட சில முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள்.
சிம்மம்:
வியாபாரரீதியாக எந்த ஒரு புதிய முயற்சிகளும் எடுக்காதீர்கள். சிலருக்கு குடும்பத்தில் எதிர்பாராத நெருக்கடிகள் வரலாம். பிள்ளைகளின் படிப்பிற்கு தேவையான விஷயம் செய்துக் கொடுப்பீர்கள்.
கன்னி:
கல்வியில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். சிந்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
உடல் சோர்வு உண்டாகும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு தேவை இல்லாத மருத்துவ செலவுகள் வரலாம். வேலை பளு அதிகரிக்கும். சோர்வான நாள்.
விருச்சிகம்:
சொந்தங்கள் மத்தியில் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். வாழ்க்கை துணையுடன் சில கருத்துவேறுபாடுகள் வரலாம். பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
தனுசு:
உயர் கல்விக்கான முக்கிய ஆலோசனை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். உங்களின் திறமை வெளிப்படும் நாள்.
மகரம்:
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களிடம் மிகவும் கவனமாக பேச வேண்டிய நாள். உங்களின் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
கும்பம்:
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.
மீனம்:
அரசாங்க வேலையில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |