இன்றைய ராசி பலன் (22-04-2026)

Report

மேஷம்:

இன்று குழந்தைகள் வழியே சிறு சிறு பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகளும் வரலாம். சேமிப்புகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.

ரிஷபம்:

இன்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதால் மட்டுமே நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல வரவு உண்டாகும்.

மிதுனம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு இன்று வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கலாம். பூர்விக சொத்தில் உள்ள பிரச்சனை விலகும்.

கடகம்:

இன்று பயணங்கள் வழியாக புதிய அனுபவங்களை பெறுவீர்கள். மனதில் தேவையில்லாத குழப்பங்களும் கற்பனைகளும் வரலாம். புதிய வீடு நிலம் வாங்கும் யோசனை உண்டாகும்.

2026: சந்திரன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்

2026: சந்திரன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்

சிம்மம்:

மனதில் இருந்த கவலைகள் விலகும். நீண்டு நாட்கள் முடிவிற்கு வராத காரியங்கள் நல்ல முடிவைப்பெறும். சூழ்நிலை அறிந்து பேசுவது மிகவும் அவசியமாகும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.

கன்னி:

நண்பர்களின் ஒத்துழைப்பால் சில முக்கிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் மீது ஆர்வம் உண்டாகும். பயணங்கள் வழியாக சில முக்கிய நண்பர்களை பெறுவீர்கள்.

துலாம்:

இன்று வேலையில் உங்களை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். தந்தையுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:

இன்று எண்ணிய காரியங்கள் நிறைவேறும். இருப்பினும் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் வந்து செல்லும். பிறரை நம்பி செயல்படுவதை தவிர்க்க வேண்டும். அமைதி கிடைக்கும் நாள்.

மகாபாரதம்: பிறர் எண்ணங்களுக்கு அதிக முக்கியம் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

மகாபாரதம்: பிறர் எண்ணங்களுக்கு அதிக முக்கியம் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தனுசு:

குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த கவலைகள் விலகும். அலுவலகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். போட்டி நிறைந்த நாள்.

மகரம்:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து லாபம் பெறுவீர்கள். எதிர்பாராத சில புதிய பயணங்கள் வழியாக புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

கும்பம்:

இன்று உங்கள் கற்பனைத் திறன் வளரும். உங்கள் குண நலன்களில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதலும் அவர்களை அனுசரித்து செல்வதும் அவசியம்.

மீனம்:

இன்று விவசாய பணிகளில் சில முக்கிய நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். வெள்ளையூர் பயணங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் பெறுவீர்கள்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US