இன்றைய ராசி பலன்(13-08-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு மனதில் சில வருத்தமும் சங்கடமும் உருவாகும் நாள். யாரை நம்புவது என்ற குழப்பம் தோன்றும். உறவுகளிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் இன்னும் அதிகம் ஆகும். கவனம் தேவை.
ரிஷபம்:
இன்று உங்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயமும் குழப்பமும் உருவாகும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கான உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்:
கடந்த கால தவறுகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். சில விஷயங்கள் உங்களுக்கு எதிராக உங்கள் தவறுகளால் செல்வதால் மனம் வருத்தம் அடையும். குடும்பத்தினரிடம் கடிந்து நடந்து கொள்வீர்கள்.
கடகம்:
இன்று உங்கள் வேலையை முடிப்பதில் முழு கவனம் செலுத்துவீர்கள். வாங்கிய கடனால் சில தொந்தரவுகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். தியானம் செய்து அமைதி பெறுவீர்கள்.
சிம்மம்:
வியாபாரத்தில் சிலருக்கு எதிர்பாரத சங்கடங்கள் உருவாகலாம். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்களை பற்றி சில தவறான கருத்துக்கள் வர வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.
கன்னி:
சிலருக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி எடுப்பதில் சில எதிர்பாராத தடைகள் சந்தித்து பிறகு சரி ஆகும். தொழில் தொடங்க வேண்டும் என்று எடுக்கும் முயற்சி நல்ல முடிவைத்தரும்.
துலாம்:
உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மேல் வைக்கும் விமர்சனங்களை காதில் வாங்கி கொள்ள வேண்டாம். கோயில் வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். மனம் வருந்தும்படி சிலர் பேசலாம்.
விருச்சிகம்:
உங்கள் வீடுகளில் சந்தித்த பிரச்சனை விலகி மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இடையே விரிசல் வர வாய்ப்புள்ளது கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரிடம் உங்கள் சொந்த கதை சொல்லாமல் இருப்பது நல்லது.
தனுசு:
வீடுகளில் உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். தேவை இல்லாமல் கடந்த கால நினைவுகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் எதிர்ப்பாராத திருப்பம் நடக்கும் நாள்.
மகரம்:
வாழ்க்கையை பற்றிய கவலை வேண்டாம். சில கிரக மாற்றம் உங்களை பதட்டமாக வைக்கலாம். ஆதலால் இதுவும் கடந்து போகும் என்று எண்ணி வாழ்க்கையை வாழுங்கள். முன்னேற்றம் பெறுவீர்கள்.
கும்பம்:
தடைகளை பார்த்து பயப்பட தேவை இல்லை. நீங்கள் நினைத்த விஷயங்கள் விரைவில் நடக்க உள்ளது. உங்கள் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். நன்மையான நாள்.
மீனம்:
இன்று நீங்கள் அமைதி காப்பது நல்லது. சில உண்மைகளை புரிந்து கொண்டு நடப்பீர்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் பற்றிய கவலையும் பயமும் உருவாகும். மதியம் மேல் நன்மை நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







