இன்றைய ராசி பலன்(05-08-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு அலுவலகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கலாம். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். மதியம் மேல் உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள்.

ரிஷபம்:

இன்று உங்கள் நட்புகளால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மதியம் மேல் வரலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திறமை வெளிப்படும் நாள்.

மிதுனம்:

உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களால் சில பாதிப்புகள் உருவாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள். தாய் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும்.

கடகம்:

விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். உங்களது முயற்சியில் தடை ஏற்படும். நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். 

சிம்மம்:

இன்று வீண் அலைச்சல் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சில தொந்தரவுகளை சந்திப்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு நல்ல முடிவைப் பெறும். தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் இருக்கும்.

கன்னி:

இன்று மிக சிறந்த நாளாக அமையப் போகிறது. உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்கள் இடையே மதிப்பு உயரும். திருமண வாழ்வு சிறப்பாக அமையும். நன்மையான நாள்.

துலாம்:

உடல் நிலையில் சில சிக்கல்கள் உருவாகும். பெற்றோர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வேலையில் பாராட்டுக்கள் பெறுவீர்கள். மதியம் மேல் மனதில் தோன்றிய குழப்பங்கள் விலகும்.

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வமும் வணங்க வேண்டிய ஆலயமும்

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வமும் வணங்க வேண்டிய ஆலயமும்

விருச்சிகம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். 

தனுசு:

குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து நடந்துக் கொள்வார்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவைப் பெரும். நினைத்ததை சாதிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்:

எதிர்பார்ப்பு மதியம் வரை பூர்த்தியாகும். அதன்பின் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். உங்கள் வேலைகள் எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். 

கும்பம்:

பணியிட பிரச்சனை முடியும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.

மீனம்:

இன்று குடும்பத்தில் சந்தித்த குழப்பங்கள் விலகும். மகன் வழியில் சில நன்மைகள் பெறுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US